BREAKING NEWS

டாஸ்மாக் கடைகளுக்கு இன்று திடீர் விடுமுறை! மதுப் பிரியர்கள் அதிர்ச்சி!

டாஸ்மாக் கடைகளுக்கு இன்று திடீர் விடுமுறை! மதுப் பிரியர்கள் அதிர்ச்சி!

காடுவெட்டி குரு நினைவு தினத்தையொட்டி, அசம்பாவிதங்களைத் தவிர்ப்பதற்காக அந்த மாவட்டத்தில் இயங்கும் 22 டாஸ்மாக் கடைகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் 5300-க்கும் மேற்பட்ட சில்லரை மது விற்பனை கடைகள் உள்ளன. தமிழ்நாடு வாணிபக் கழகம் (டாஸ்மாக்) மூலம் மது விற்பனை செய்யப்படுகிறது. தமிழக அரசின் நிதி ஆதாரத்தில் டாஸ்மாக் மது விற்பனை முக்கிய பங்காற்றி வருகிறது. இந்த கடைகளில் வார நாட்களில் சராசரியாக ரூ.100 கோடி வரையிலும், வார இறுதி நாட்களில் நூறு கோடிக்கு அதிகமாக விற்பனையாகிறது.

டாஸ்மாக் விடுமுறை

இந்நிலையில், தமிழ்நாடு மாநில வாணிப கழகம், பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்ட மேலாளர் செல்வராஜ் அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

அந்த கடிதத்தில், “முன்னாள் வன்னியர் சங்கத் தலைவரான குருநாதன் என்கின்ற காடுவெட்டி குரு என்பவரின் 4-ம் ஆண்டு நினைவு தின அஞ்சலியை முன்னிட்டு 25.05.2022 தேதி வன்னியர் சங்கத்தினர், பாமக தொண்டர்கள் சுமார் 5,000-க்கும் மேற்பட்டோர் மீன்சுருட்டி காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட அவரது நினைவு இடமான காடுவெட்டியில் அஞ்சலி செலுத்த உள்ளதால், சட்டம் – ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் இருக்க மீன்சுருட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் உள்ள 22 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.

காடுவெட்டி குரு

அதன்படி, செந்துரை, ஆண்டிமடம், ஜெயங்கொண்டம், டி.புலியூர், மீன்சுருட்டி, பாப்பாக்குடி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அரசு டாஸ்மாக் மதுபானக் கடைகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால் மதுப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

முன்னதாக கடந்த 2018-ம் ஆண்டு மே 25-ந் தேதி வன்னியர் சங்க தலைவராக இருந்த காடுவெட்டி ஜெ.குரு உடல் நலக்குறைவால் காலமானார். அதனைத் தொடர்ந்து அவருக்கு பாமக சார்பில் அவரது சொந்த ஊரான காடுவெட்டியில் ரூ.2 கோடி செலவில் மணிமண்டபம் கட்டப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் பாமக சார்பில் ஆயிரக்கணக்கான நிர்வாகிகள் தொண்டர்கள் காடுவெட்டிக்கு வந்து அஞ்சலி செலுத்துவது வழக்கம்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )