டாஸ்மாக் கடைக்கு பூட்டு போடும் போராட்டம் அதிகாரிகள் பேச்சு வார்த்தையால் போராட்டம் வாபஸ்.
![டாஸ்மாக் கடைக்கு பூட்டு போடும் போராட்டம் அதிகாரிகள் பேச்சு வார்த்தையால் போராட்டம் வாபஸ். டாஸ்மாக் கடைக்கு பூட்டு போடும் போராட்டம் அதிகாரிகள் பேச்சு வார்த்தையால் போராட்டம் வாபஸ்.](https://aramseithigal.com/wp-content/uploads/2022/10/IMG-20221021-WA0058.jpg)
செய்தியாளர் கொ.விஜய்.
கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த சிறுநெசலூர் டாஸ்மாக் கடைக்கு பூட்டு போடும் போராட்டம் அனைத்து கட்சி சார்பில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து நேற்று வேப்பூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வேப்பூர் வருவாய் வட்டாட்சியர் (பொ) மற்றும் சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் அந்தோணிராஜ் தலைமையில் விருத்தாச்சலம் கோட்ட கலால் அலுவலர், வேப்பூர் காவல் உதவி ஆய்வாளர் ஆகியோர் முன்னிலையில் சமாதான பேச்சு வார்த்தை நடைபெற்றது,
கூட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் ஒன்றிய தலைவர் கந்தன் தலைமையில் பாஜக மாநில நிர்வாகி ராஜா உடையார், பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த கோபி, தேமுதிக கட்சியின் மாவட்ட நிர்வாகி செந்தில் குமார் ஆகியோர் அதிகாரிகளிடம் இந்த டாஸ்மாக் கடை மற்றும் பாரினால் மாணவ மாணவிகளுக்கும் குடிமகன்கள் இடையூறு ஏற்படுத்துகின்றனர் என்றும்,
அரசு மாணவியர் விடுதி, ஆதிதிராவிட அரசு துவக்கப்பள்ளி, தேவாலயம், அரசு மருத்துவமனை, பத்திரப்பதிவு அலுவலகம், பிஎஸ்என்எல் அலுவலகம் போன்றவைகள் 50 மீட்டருக்குள்ளேயே இருப்பதால்,
அரசு அதிகாரிகளுக்கு குடிமகன்கள் அட்டகாசம் செய்வதால் பணி செய்ய முடியாமல், பள்ளிக்குச் செல்ல முடியாமல் மாணவ மாணவிகள் பெரும் சிரமம் அடைவதாக தெரிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து 15 நாட்களுக்குள் கடை மூடப்பட்டு வேறு இடத்திற்கு மாற்றப்படும் என எழுத்துப்பூர்வமாக அதிகாரிகள் உறுதி அளிக்கப்பட்டதை தொடர்ந்து.
பாரதிய ஜனதா உள்ளிட்ட அனைத்து கட்சி சார்பில் அறிவிக்கப்பட்ட போராட்டம் வாபஸ் பெற்றுக் கொள்வதாக அறிவித்தனர்.