BREAKING NEWS

தகுதியுடைய செவிலியர்களுக்கு பணி நிரந்தரமாக்கப்படும் !! அமைச்சர் உறுதி!!

தகுதியுடைய செவிலியர்களுக்கு பணி நிரந்தரமாக்கப்படும் !! அமைச்சர் உறுதி!!

தமிழகம் முழுவதும்  மொத்தம் 8 செவிலியர்கள் சங்கங்கள்  உள்ளன. பணி நிரந்தரம், சம்பள உயர்வு உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடத்தி வருகின்றனர். பணி நிரந்தரம் உட்பட கோரிக்கைகளை முன்வைத்து அரசு மருத்துவமனை செவிலியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை வளாகத்தில் 100க்கும் மேற்பட்ட செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். காவல்துறை போராட்டம் நடத்தும் செவிலியர்களுடன் பேசுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுவரை பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. அத்துடன் செவிலியர்கள் சாலை மறியலிலும் ஈடுபட்டு வருகின்றனர்.  இதனால் அவர்களை காவல்துறை கைது செய்துள்ளது . இச்சம்பவம் குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தகுதியுடைய செவிலியர்கள் அனைவரும் பணி நிரந்தரம் செய்யப்படும் பணி நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளார்.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )