தஞ்சாவூரில் பாலம் கட்டும் பணியால் போக்குவரத்து கடும் பாதிப்பு பொதுமக்கள் அவதி
தஞ்சாவூரில் பழைய பேருந்து நிலையத்திலிருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் கரந்தை பகுதியில் வடவாற்றின் குறுக்கே கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ரூ மூன்று கோடி மதிப்பில் பாலம் கட்டும் பணி தொடங்கி தற்போது வரை நடைபெற்று வருகிறது.
இந்த பாலம் கட்டும் பணியால் ஆற்றின் குறுக்கே மாற்றுப்பாதை அமைக்கப்பட்டு இரண்டு சக்கர வாகனங்களில் செல்வோர் மிகுந்த சிரமத்தில் சென்று கொண்டிருந்தனர்.
இந்நிலையில் வடவாற்றில் தண்ணீர் திறக்க வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கையின் அடிப்படையில் ஆற்றில் தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்கும் வகையில் பாலம் கட்டும் பணி நடைபெற்றது.
இதனையடுத்து இன்று ஆற்றில் தண்ணீர் விடப்பட்டதால் மாற்றுப்பாதை மூடப்பட்டது இந்நிலையில் புதிய பாலம் கட்டும் பணியும் தொடர்ந்து நடைபெறுகிறது, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளின் திட்டமிடப்படாத செயலால் போக்குவரத்து திறந்து விடப்பட்டு பாலத்தில் கடும் போக்குவரத்து ஏற்படுகிறது இதனால் பொதுமக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
இந்நிலையில் இந்த பாலம் கட்டுமான பணியை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பார்வையிட்டு பாலம் கட்டும் பணியால் அதிருப்தியடைந்து பணிகளை விரைவாக முடிக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.