BREAKING NEWS

தஞ்சாவூர், ஆன்லைன் சூதாட்டங்களையும் தடைசெய்ய வலியுறுத்தி மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய ஜனநாயக கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

தஞ்சாவூர், ஆன்லைன் சூதாட்டங்களையும் தடைசெய்ய வலியுறுத்தி மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய ஜனநாயக கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

தஞ்சாவூர் மாவட்டம் தஞ்சை ரயில் நிலையம் அருகே ஆன்லைன் சூதாட்டங்களையும் தடைசெய்ய வலியுறுத்தி மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய ஜனநாயக கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு மேற்கு மாவட்ட தலைவர் ச.சிமியோன் சேவியர் ராஜ் தலைமையில் ஒன்றிய செயலாளர் பி.எஸ்.திருமாறன் முன்னிலை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தியும்அறிஞர் அண்ணா குருங்குளம் சர்க்கரை ஆலையில் விவசாயிகளுக்கு பல ஆண்டுகளாக பாக்கி வைத்திருக்கின்ற கரும்பு நிலுவைத் தொகை 21 கோடியை உடனடியாக வழங்க வேண்டும்ஆன்லைன் மூலமாக ரம்மி ,லாட்டரி உள்ளிட்ட பல்வேறு வகையான உள்நாட்டு ,வெளிநாட்டு சூதாட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. வேலை கிடைக்காமல் கஷ்டத்தில் இருக்கின்ற இளைஞர்களும், வருவாய் போதாத குடும்பங்களும் மற்றும் பல்வேறு தரப்பினரும் சூதாட்டத்தால் கவரப்பட்டு தங்களது உடைமைகளுடன் பெரும் கடனாளியாகி அச்சப்பட்டு தற்கொலை செய்து கொள்வது பெரிய அளவில் பரவி வருகிறது .நாட்டின் எதிர்காலம் கருதியும், சமூக நலன் கருதியும் உடனடியாக தமிழ்நாடு அரசு அனைத்து வகையான ஆன்லைன் சூதாட்டங்களையும் தடை செய்ய வேண்டும், போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )