தஞ்சாவூர் மாநகராட்சி 15வது வார்டு பகுதி சபா கூட்டம்.

தஞ்சாவூர் மாநகராட்சி 15வது வார்டு சார்பில் நவமணி மஹாலில் பகுதி சபா கூட்டம் மாமன்ற உறுப்பினர் காந்திமதி தலைமையில் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்ட வார்டு பொதுமக்கள் தங்கள் பகுதியில் சாலை ஓரத்தில் மீன் சந்தை இயங்கி வருவதால் போக்குவதற்கு இடையூறு சுகாதார சீர்கேடு என பல இன்னல்களை சந்தித்து வருவதால் தற்காலிக மீன் சந்தையை மாற்ற வேண்டும்.
மேலும் அதன் எதிரே அமைந்துள்ள டாஸ்மாக் மதுக்கடையினால் அந்தப் பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுவது நீடித்து வருவதால் டாஸ்மாக் மது கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் தங்கள் பகுதியில் உள்ள அனைத்து சாலைகளையும் சீர் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
CATEGORIES தஞ்சாவூர்
TAGS அரசியல்தஞ்சாவூர் மாநகராட்சிதஞ்சாவூர் மாநகராட்சி 15வது வார்டு பகுதி சபா கூட்டம்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்