தஞ்சாவூர் மாநகராட்சி 8வது வார்டு இடைத்தேர்தலில் போட்டியிட திமுக வேட்பாளர் முகமது இப்ராஹிம் சுல்தான் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.

தஞ்சாவூர் மாநகராட்சி 8 வது வார்டு திமுக மாமன்ற உறுப்பினர் ஜெய்லானி உடல்நலக்குறைவால் இறந்ததை அடுத்து ஜூலை 9ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது இதில் திமுக வேட்பாளராக ஜெய்லானியின் சகோதர் முகமது இப்ராஹிம் சுல்தான் போட்டியிடுகிறார்.

இவர் இன்று அண்ணா மற்றும் பெரியார் சிலைகளுக்கு மாலை அணிவித்து விட்டு மாநகராட்சி அலுவலகத்தில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார் இதில் தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் எஸ் பழனிமாணிக்கம் சட்டமன்ற உறுப்பினர் டி கே ஜி நீலமேகம் மேயர் சன் ராமநாதன்
துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் வெற்றி பெறுவது உறுதி என அப்போது தெரிவித்தனர்.
