தஞ்சாவூர் மாநகராட்சி சார்பில் தமிழகத்தில் முதன்முறையாக இலவச ஆம்புலன்ஸ் சேவை செயல்படுத்த முடிவு மாநகராட்சி மேயர் தகவல்

தஞ்சாவூர் மாநகராட்சி மேயராக பொறுப்பு வகித்து வருபவர் ராமநாதன் இவர் மேயராக பொறுப்பேற்று 100 நாட்களை அடைந்த நிலையில் தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு இனிப்பு வழங்கி தனது வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொண்டார் .


மேலும் ஆணையர் சரவணகுமாரிடம் தனது வாழ்த்துக்களையும் பரிமாறிக் கொண்டார் பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தஞ்சாவூர் மாநகராட்சியில் தமிழகத்தில் முதன்முறையாக பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் இலவச ஆம்புலன்ஸ் சேவை செயல்படுத்த உள்ளதாகவும் கட்டணமில்லா தொலைபேசி சேவை எண் அறிமுகப்படுத்தப்பட்டு அவசர கால சிகிச்சை விபத்து சிகிச்சை மற்றும் அமரர் ஊர்தி சேவை தொடங்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.

இப் பேட்டியின்போது ஆணையர் சரவணகுமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
CATEGORIES தஞ்சாவூர்
