தஞ்சாவூர் மாவட்டம் விவசாயிகள் மேகதாது அணை குறித்து காவேரி மேலாண்மை ஆணையம் விவாதிப்பதை கண்டித்து கருப்பு கொடி ஆர்ப்பாட்டம். நடைபெற்றது.

ரயில் நிலையம் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு விவசாய சங்க மாவட்டத் தலைவர் வீர மோகன் தலைமை வகித்தார் .தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட செயலாளர் என்.வி.கண்ணன் முன்னிலை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் கே. முகமது அலி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் முத்து உத்திராபதி, மார்க்சிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் சின்னை.பாண்டியன், விவசாயதொழிலாளர் சங்க நிர்வாகிகள் ஜி.கிருஷ்ணன், கே.அபிமன்னன், ஆகியோர் உரையாற்றினார்கள். ஆர்ப்பாட்டத்தில் ஆர். பிரபாகர், எம்.வடிவேலன் ஞான.மாணிக்கம் ஆர். கே.செல்வகுமார், மாதர் சங்க நிர்வாகி கே.வசந்தி, தொழிற்சங்க நிர்வாகிகள் சி.ஜெயபால் வெ.சேவையா, துரை.மதிவாணன், ஆர்.பி.முத்துக்குமரன் மாவட்ட செயலாளர் ஜெயப உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தில் கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவதற்கு எடுக்கும் முயற்சிகளை ஒன்றிய அரசு முழுமையாக தடை செய்ய வேண்டும், ஆதரவளிக்கக் கூடாது,காவிரி ஆணையத்தில் மேகதாது அணை குறித்து விவாதிக்க அரசு சட்டபூர்வ அனுமதி அளித்திருப்பது வன்மையாக கண்டனத்திற்குரியது, மேகதாது அணை குறித்து ஆணையத்தில் விவாதிக்கக் கூடாது என்றும், இது உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல், தீர்ப்புக்கு எதிரானது என்றும், கர்நாடக அரசு மேகதாது அணை கட்டும் முயற்சிகளை காவிரி டெல்டா விவசாயிகள் ஒன்றிணைந்து முறியடிப்போம் என்றும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
