தஞ்சை அருகே சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி முறைகேடாக நடந்து கொண்ட வாலிபரை வல்லம் அனைத்து மகளிர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தஞ்சை அருகே ரெட்டிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவரிடம் மானோஜிப்பட்டி பகுதியை சேர்ந்த அறிவழகன் (30) என்பவர் ஆசை வார்த்தை கூறி நெருங்கி பழகி வந்துள்ளார். பின்னர் திருமணம் செய்து கொள்வதாக கூறி அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்த சிறுமி கர்ப்பம் அடைந்துள்ளார். இதுகுறித்து அறிந்த அந்த பெண்ணின் பெற்றோர் அந்த சிறுமியை தஞ்சை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
அங்கு சிறுமியின் நிலை குறித்து அறிந்து சைல்ட் லைன் அமைப்பிற்கு புகார் சென்றுள்ளது. இதையடுத்து வல்லம் அனைத்து மகளிர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் அறிவழகன் குறித்த விவரங்கள் தெரிய வந்தது. இதையடுத்து சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி முறைகேடாக நடந்து கொண்ட அறிவழகன் மீது வல்லம் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதையறிந்த அறிவழகன் தலைமறைவானார். இந்நிலையில் தஞ்சையில் பதுங்கியிருந்த அறிவழகனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
