தஞ்சை பிள்ளையார்பட்டி ஊராட்சி சார்பில் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி வளாகத்தில் கிராம சபை கூட்டம்.

தஞ்சாவூர் பிள்ளையார்பட்டி ஊராட்சி சார்பில் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி வளாகத்தில் கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் உதயகுமார் தலைமையில் நடைபெற்றது.
கூடுதல் ஆட்சியர் சுகபுத்திரா கலந்துகொண்டு கொரோனா காலம் முதல் தற்போது வரை சிறப்பாக பணியாற்றிய தூய்மை பணியாளர்களை கௌரவிக்கும் வகையில் பொன்னாடை போர்த்தி சிறப்பு பரிசு வழங்கப்பட்டது.
இந்த கூட்டத்தில் கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டு தங்கள் பகுதியில் குடிநீர் சேவை சாலை வசதி மின்விளக்கு வசதி உள்ளிட்ட அடிப்படை கோரிக்கைகளை முன் வைத்தனர் பின்னர் அவை தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டன.
CATEGORIES தஞ்சாவூர்
TAGS அரசியல்தஞ்சாவூர் கூடுதல் ஆட்சியர் சுகபுத்திராதஞ்சாவூர் பிள்ளையார்பட்டி ஊராட்சி கிராம சபை கூட்டம்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்