தஞ்சை பெரிய கோவில் வளாகத்தில் வராகி அம்மன் சன்னதியில் அபிஷேக நீர்கள் தேங்கி துர்நாற்றம்.

உலக பிரசித்தி பெற்ற தஞ்சை பெரிய கோவில் வளாகத்தில் வராகி அம்மன் சன்னதியில் அபிஷேக நீர்கள் தேங்கி நிற்பதால் துர்நாற்றம் வீசுகிறது.
வரும் பக்தர்கள் சுற்றுலாப் பயணிகள் அனைவரும் முகம் சுளிக்கும் வண்ணம் இருப்பதால் மாண்புமிகு மேயர் அவர்களும் தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர் அவர்களும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள கேட்டுக்கொள்ளப்பட்டது.
தீபாவளி பண்டிகை முன்னிட்டு சாலையோர வியாபாரிகளுக்கு தற்காலிக கடைகள் அமைத்து தர கேட்டுக் கொள்ளப்பட்டது பாதாள சாக்கடை பணியாளர் திரு தனசேகர் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
அதேபோல் ராஜன் இ எஸ் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டு பேசிக் கொண்டிருக்கும்போது மேயர் அவர்கள் இந்த மாநகராட்சியிலேயே சிறந்த மாமன்ற உறுப்பினராக செயலாற்றுகிறீர்கள் என்று அனைவரும் முன்னிலையிலும் பாராட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது. பதினைந்தாவது வார்டு மாமன்ற உறுப்பினர் காந்திமதி.
