தஞ்சை மண்டல திமுக தகவல் தொழில்நுட்ப அணி பொறுப்பாளர் பி.எம். ஸ்ரீதர் நியமனம்
தரங்கம்பாடி,
திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் தஞ்சை மண்டல பொறுப்பாளராக மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவிலை சேர்ந்த பி.எம் ஸ்ரீதர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டம் திமுக தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளராக இருந்து வந்த பி.எம். ஸ்ரீதர் தஞ்சை தெற்கு, தஞ்சை மத்தியம், தஞ்சை வடக்கு, நாகை தெற்கு, நாகை வடக்கு, கடலூர் கிழக்கு, கடலூர் மேற்கு,
திருவாரூர் ஆகிய மாவட்டங்கள் உள்ளடக்கிய தஞ்சை மண்டல திராவிட முன்னேற்றக் கழக தகவல் தொழில்நுட்ப அணியின் பொறுப்பாளராக தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இவர் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர், நாகை வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான நிவேதா எம்.முருகனை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
TAGS Dmkஅரசியல்தமிழ்நாடுதரங்கம்பாடிதலைப்பு செய்திகள்திமுகதிமுக தகவல் தொழில்நுட்ப அணி பொறுப்பாளர்பி.எம். ஸ்ரீதர் நியமனம்