தஞ்சை மாவட்ட பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதாக தஞ்சை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

தஞ்சை மாவட்டத்திற்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்படவில்லை பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதாக தஞ்சை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அளித்த பேட்டியில் காவேரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் அதிக அளவு தண்ணீர் திறக்கப்பட உள்ளதால் ஆட்டோ மற்றும் தண்டோரா மூலம் எச்சரிக்கை விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர் சுற்றுலா பயணிகள் பொதுமக்கள் மாணவர்கள் தண்ணீரில் இறங்கவோ குளிக்கவோ கூடாது செல்பி எடுக்கக் கூடாது என கேட்டுக்கொண்டார் தஞ்சை மாவட்டத்தை பொருத்தவரையில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்படவில்லை பொதுமக்களுக்கு கவனமாக இருக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்
பேட்டி தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தஞ்சை மாவட்ட ஆட்சியர்.