தஞ்சை மாவட்டத்தில் இரவு நேரங்களில் பெய்து வரும் கனமழையால் காய்கறி சந்தையில் குளம் போல் தேங்கி நிற்கும் மழை நீர் சகதியுடன் உள்ளதால் சந்தைக்கு காய்கறி விற்பனை மற்றும் வாங்க வருபவர்கள் பாதிப்பு.
தொடர் மழை காரணமாக தஞ்சை மாவட்டத்திற்கு பள்ளிகளுக்கு இன்று விடுமுறை.
தீபாவளி பண்டிகை முன்னிட்டு தஞ்சையின் முக்கிய காய்கறி சந்தை பகுதியான காமராஜர் மார்க்கெட் பகுதியில் தீபாவளி விற்பனை நடைபெற்று வருகிறது.
வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அதிகளவு காய்கனிகளை வாங்கி வரும் வேளையில் தொடர் மழை காரணமாக குளம் போல் காட்சியளிக்கும் தஞ்சாவூர் காய்கனி சந்தை வாங்க மற்றும் விற்க வரும் பொதுமக்கள் வியாபாரிகள் அவதி.
தஞ்சை மாநகராட்சி காமராஜர் காய்கனி சந்தையில் 300-க்கும் மேற்பட்ட கடைகள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட தரைக்கடைகள் உள்ளன.
நாள்தோறும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் பொருட்களை விற்பதற்காகவும் அதற்கான பொதுமக்கள் காய்கறிகள் வாங்குவதற்காகவும் வந்து செல்கின்றனர்.
தற்போது மாலை இரவு நேரங்களில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக சந்தை முழுவதும் குலம் போல் காட்சியளிப்பதால் காய்கறிகள் விற்பனை செய்ய வாங்க வருபவர்கள் கடும் பாதிப்பு போதிய வியாபாரம் இன்றியும் தீபாவளி பண்டிகைக்கு போதிய காய்கனிகள் வாங்க முடியாமலும் பாதிப்பு.