தஞ்சை மாவட்டம் துலுக்கம்பட்டியில் கோயில் திருவிழாவின் போது ஏற்பட்ட தகராறில் ரவுடி வெட்டி கொலை தமிழ் பல்கலைக்கழக போலீசார் விசாரணை.

தஞ்சை மாவட்டம் துலுக்கம்பட்டி பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவரின் மகன் சுபாஷ்சந்திரபோஸ் (27). ரவுடி. இந்நிலையில் துலுக்கம்பட்டியில் உள்ள சியாமளா தேவி கோவிலில் நேற்று ம11ம் தேதி திருவிழா நடந்துள்ளது. அதில் சுபாஷ் சந்திரபோஸ் மற்றும் அவரது உறவினர்களான துலுக்கம்பட்டி கீழத் தெருவை சேர்ந்த நடராஜன் மகன் ஜோதி ராஜன் (37), திருவையாறு நாகாத்தி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ராஜமாணிக்கம் மகன் சிவகுமார் (33) ஆகியோருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் மாலை கோயிலில் மஞ்சள் நீராட்டு விழா நடந்த போது சுபாஷ் சந்திரபோஸ் மஞ்சள் தண்ணீரை எடுத்து ஜோதிராஜன், சிவக்குமார் ஆகியோர் மீது ஊற்றி அரிவாளை காட்டி மிரட்டியுள்ளார். இதனால் இருதரப்புக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் ஜோதிராஜன் மற்றும் சிவக்குமார் சேர்ந்து சுபாஷ் சந்திரபோசை அரிவாளால் வெட்டினர்.

இதுகுறித்து அறிந்த தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சுபாஷ் சந்திரபோசை மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சுபாஷ் சந்திரபோசை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
தொடர்ந்து தமிழ்ப்பல்கலைக்கழக போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜோதிராஜன் மற்றும் சிவக்குமாரை பிடித்து விசாரடிண மேற்கொண்டுள்ளனர். சுபாஷ் சந்திரபோஸ் மீது தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக போலீசில் கொலை வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
