தஞ்சையில் தஞ்சை தெற்கு மாவட்ட அதிமுக புதிய அலுவலகத்தை கழக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் திறந்து வைத்தார்.

தஞ்சாவூர் மேம்பாலம் அருகே உள்ள சிவாஜி நகர் பகுதியில் தஞ்சை தெற்கு மாவட்ட அதிமுக அலுவலகம் புதிதாக திறக்கப்பட்டது அலுவலகத்தை கழக துணை ஒருங்கிணைப்பாளர் ஆர் வைத்திலிங்கம் திறந்து வைத்தார்.


முன்னதாக விடியற்காலை 3 மணியிலிருந்து யாகம் வளர்க்கப்பட்டு சிறப்பு பூஜைகள் ஹோமங்கள் செய்யப்பட்டது பின்பு கோமாதா பூஜை செய்யப்பட்ட கலச நீர் அலுவலகத்தின் மேல் சிவாச்சாரியர்கள் ஊற்றினர் இந்நிகழ்வில் முன்னாள் அதிமுக அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் முன்னாள் அரசு கொறடா ராஜேந்திரன் தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் எம் ஜி எம் சுப்பிரமணியன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் ராம்குமார் ,



ராஜேந்திரன் ஒன்றிய செயலாளர்கள் துரை வீரணன், ரவி, பால்வள தலைவர் காந்தி, பகுதி செயலாளர்கள் அறிவுடைநம்பி ,ரமேஷ், புண்ணியமூர்த்தி ,சண்முக பிரபு ,மற்றும் கழக தொழில்நுட்ப பிரிவு திருச்சி மண்டல பொறுப்பாளர் வினோ பாலன் மற்றும் ஒன்றிய கழக நிர்வாகிகள் மற்றும் அதிமுக உறுப்பினர்கள் திரளாக இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
