தஞ்சையில் தி.மு.க. சார்பில் பேரறிஞர் அண்ணா 114-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

தஞ்சாவூரில் பேரறிஞர் அண்ணா 114-வது பிறந்தநாள் கொண்டாட்டம். தி.மு.கவினர் ஊர்வலமாக வந்து சிலைக்கு மாலை அணிவித்தனர் தஞ்சையில் தி.மு.க. சார்பில் பேரறிஞர் அண்ணா 114-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
மத்திய மாவட்ட பொறுப்பாளரும், திருவையாறு சட்டமன்ற உறுப்பினருமான துரை சந்திரசேகரன் தலைமையில் தஞ்சை மாநகர செயலாளரும் மாநகராட்சி மேயருமான சண்.ராமநாதன் முன்னிலை வகிக்க தஞ்சை மாவட்ட தி.மு.க அலுவலகமான கலைஞர் அறிவாலயத்தில் இருந்து தி.மு.க.வினர் ஊர்வலமாக புறப்பட்டு பழைய பஸ் நிலையம் வந்தடைந்தனர்.
அங்குள்ள பேரறிஞர் அண்ணாவின் சிலைக்கு மத்திய மாவட்ட பொறுப்பாளரும், சட்டமன்ற உறுப்பினருமான துரை. சந்திரசேகரன்,மாநகர செயலாளரும் மேயருமான சண் ராமநாதன் உள்ளிட்ட பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்த நிகழ்ச்சியில் மாநில வர்த்தக அணி தலைவர் உபயதுல்லா, சட்ட திட்ட திட்டக்குழு உறுப்பினர் இறைவன், தலைமை செயற்குழு உறுப்பினர் செல்வம், பொதுக்குழு உறுப்பினர் ஆறுமுகம், மாநில விவசாய அணி துணை செயலாளர் ஜித்து, முன்னாள் எம்.பி. பரசுராமன், மாவட்ட பொருளாளர் எல்.ஜி. அண்ணா,
மாவட்ட மருத்துவர் அணி அமைப்பாளரும் துணை மேயருமான டாக்டர் அஞ்சுகம் பூபதி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உஷா புண்ணியமூர்த்தி, மாநில பிரச்சாரக் குழு உறுப்பினர் இறைகார்குழலி,
தஞ்சை தெற்கு ஒன்றிய செயலாளர் அருளானந்த சாமி, மேற்கு ஒன்றிய செயலாளர் உலகநாதன், வடக்கு ஒன்றிய செயலாளர் முரசொலி, கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வகுமார், வல்லம் பேரூர் செயலாளர் கல்யாண சுந்தரம், தஞ்சை ஒன்றிய பெருந்தலைவர் வைஜெயந்தி மாலா கேசவன்,
வல்லம் பேரூராட்சி தலைவர் செல்வராணி, பகுதி செயலாளர்கள் மேத்தா, சதாசிவம், கார்த்திகேயன், நீலகண்டன், மண்டல குழு தலைவர்கள் புண்ணியமூர்த்தி, ரம்யாசரவணன், கலையரசன், மாவட்ட அணி அமைப்பாளர்கள் சண்முகசுந்தரம், கமலா ரவி, வரகூர் காமராஜ், செந்தமிழ் செல்வன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
