BREAKING NEWS

தஞ்சையில் மாவட்ட அளவில் நடைபெற்ற சிலம்ப போட்டியில் பள்ளி மாணவ மாணவிகள் உற்சாகமாக கலந்து கொண்டனர்.

தஞ்சையில் மாவட்ட அளவில் நடைபெற்ற சிலம்ப போட்டியில் பள்ளி மாணவ மாணவிகள் உற்சாகமாக கலந்து கொண்டனர்.

 

தமிழ்நாடு சிலம்ப கமிட்டி தஞ்சாவூர் சிலம்ப கமிட்டி உள்ளிட்டவை இணைந்து மூன்றாவது மாவட்ட அளவிலான சிலம்பப் போட்டி தஞ்சையில் நடைபெற்றது. 12 வகையான போட்டிகள் நடைபெற்றது.

 

ஒரு நபர் அதிகபட்சம் நான்கு வகையான போட்டியில் மட்டுமே கலந்து கொள்ளும்படி விதிமுறை விதிக்கப்பட்டிருந்தது. போட்டிகள் வயதின் அடிப்படையில் நடத்தப்பட்டன.

 

 

வயது வரம்பு ஐந்து முதல் 30 வயது வரை உள்ளவர்கள் பங்கேற்று சிறப்பித்தனர். தஞ்சாவூர் திருவாரூர் மதுரை உள்பட 10-க்கும் மாவட்டங்களில் இருந்து மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.

 

இந்த போட்டியில் வெற்றி பெறும் மாணவர்கள் டிசம்பர் மாதம் மாநில அளவிலான போட்டிக்கு பங்கேற்க தயார் செய்ய உள்ளார்கள்.

 

 

மாநில அளவில் வெற்றி பெறும் மாணவர்கள் தேசிய அளவிலான போட்டிக்கு தயார் செய்யப்பட உள்ளார்கள்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )