தந்தை பெரியாரின் நினைவு நாளை முன்னிட்டு கோவில்பட்டி அருகே பெரியாரின் திருவுருவச்சிலைக்கு திமுக கட்சியினர் மரியாதை.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்.
தந்தை பெரியாரின் நினைவு நாளை முன்னிட்டு கோவில்பட்டி அருகே கீழப்பாண்டவர் மங்கலத்தில் உள்ள பெரியாரின் திருவுருவச்சிலைக்கு திமுக கட்சியினர் மாலையணிவித்து மரியாதை செலுத்தினர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மத்திய ஒன்றிய, நகர திமுக சார்பில் ஒன்றிய செயலாளர் முருகேசன் தலைமையில் நகர செயலாளரும், நகரமன்ற தலைவர் கருணாநிதி பெரியாரின் திருஉருவச்சலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
நிகழ்ச்சியில் செயற்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் சந்தானம், மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் ரமேஷ், மாவட்ட விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் சண்முகராஜ், மாவட்ட இலக்கிய அணி தலைவர் சோழபெருமாள்,
மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் சூர்யராஜ், வழக்கறிஞரணி அழகர்சாமி,
மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர்கள் செல்வமணிகண்டன், தாமோதரகண்ணன், கணேசன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் பாரதி ரவிக்குமார்,
முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் கனகராஜ், மாதேஸ்வரன், அழகுராஜ், சுப்புராஜ், உதயகுமார், முத்துப்பாண்டி, சிவசெந்தூர், மாரியம்மாள், ராமமூர்த்தி, ராஜா, முருகன், உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.