BREAKING NEWS

தனது வங்கி கணக்கில் இருந்து பொய் கையெழுத்து போட்டு சகோதரர் ரூ.25 லட்சம் வரை மோசடி.

தனது வங்கி கணக்கில் இருந்து பொய் கையெழுத்து போட்டு சகோதரர் ரூ.25 லட்சம் வரை மோசடி.

தனது வங்கி கணக்கில் இருந்து பொய் கையெழுத்து போட்டு சகோதரர் ரூ.25 லட்சம் வரை மோசடியாக பணத்தை எடுத்து விட்டார் என்று தஞ்சை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் இளைஞர் புகார் செய்துள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே வெள்ளாலங்காடு பகுதியை சேர்ந்தவர் பஞ்சாட்சரம் மகன் பாஸ்கரன். இவர் சிங்கப்பூரில் பூக்கடை வைத்துள்ளார். அங்கு குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு பெருமகளூரில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் சேமிப்பு கணக்கு உள்ளது.

இந்நிலையில், கடந்த 2019ம் ஆண்டு ஜூலை.5ம் தேதி, பாஸ்கரனின் சகோதரர் தண்டாபாணி, பார்த்தசாரதி மற்றும் வங்கி மேனேஜர் ஆகியோர் உதவியுடன், பாஸ்கரனின் கையெழுத்தை போட்டு அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.25 லட்சத்தை தனது வங்கி கணக்கிற்கு மாற்றம் செய்துள்ளார்.

இது குறித்து அறிந்த பாஸ்கரன், தனது சகோதரர் தண்டபாணியிடம் பணத்தை திருப்பி தருமாறு பலமுறை கேட்டுள்ளார். ஆனால் அவர் தரமறுத்து வந்துள்ளார். இதையடுத்து பாஸ்கரன் தஞ்சாவூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். இதன்பேரில், இன்ஸ்பெக்டர் பொறுப்பு ரவிமதி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )