BREAKING NEWS

தனியார் பள்ளி வாகனங்களுக்கு கிடுக்கிப்பிடி!! அதிரடி காட்டும் வட்டாரப்போக்குவரத்து அதிகாரிகள்!!!

தனியார் பள்ளி வாகனங்களுக்கு கிடுக்கிப்பிடி!! அதிரடி காட்டும் வட்டாரப்போக்குவரத்து அதிகாரிகள்!!!

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து தனியார் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் ஜூன் 13ம் தேதி திறக்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கு வாகன வசதி உள்ளது. புதிய கல்வியாண்டு தொடங்க உள்ள நிலையில் தனியார் வேன் மற்றும் பேருந்துகள் முறையாக பராமரிக்கப்பட்டுள்ளதா? அதில் அனைத்து வசதிகளும் உள்ளதா? என்று வட்டார போக்குவரத்து அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

அதன்படி செங்கல்பட்டு வட்டார போக்குவரத்துக்குட்பட்ட செங்கல்பட்டு, திருக்கழுக்குன்றம், மதுராந்தகம் உட்பட 40க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளிகளில் மாணவர்கள் வசதிக்காக இயக்கப்படும் சுமார் 220க்கும் மேற்பட்ட வேன் மற்றும் பேருந்துகள் முறையாக பராமரிக்கப்பட்டு வருகிறதா? என அரசினர் தொழிற்பயிற்சி மைதானத்தில், சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அங்கு நிறுத்தப்பட்டிருந்த ஒவ்வொரு வாகனங்களையும் வாகன சிறப்பு தணிக்கை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த ஆய்வில் பள்ளி வாகனத்தை இயக்க, டிரைவர் முறையாக ஓட்டுனர் உரிமம் பெற்றுள்ளாரா? குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் முன் அனுபவம் உள்ளவரா? என்பது குறித்தும் பலவிதமான கேள்விகள் கேட்கப்பட்டு வருகின்றன.

அத்துடன் பேருந்து வேன்களில் இருக்கை வசதிகள்,  வேகக்கட்டுப்பாடு கருவி,  அவசரகால வழி, முதலுதவி சிகிச்சை பெட்டி, கேமராக்கள்  குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். இது தவிர எதிர்பாராதவிதமாக  பள்ளி வாகனங்கள் விபத்துக்குள்ளானால் ஓட்டுநர்கள் செயல்பட வேண்டிய விதம், தீப்பிடித்தால் அதனை கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்தும் ஓட்டுநர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. நேற்று மொத்தம் 191 வாகனங்கள் சோதனை செய்யப்பட்டதில் 5 வாகனங்கள் திருப்பி அனுப்பபட்டது. பழைய வாகனங்களில் உள்ள குறைபாடுகள் நீக்கப்பட்டு  உரிய சான்று பெற்று அதன் பிறகே மாணவர்களை வாகனத்தில் ஏற்றிச்செல்ல  வேண்டும் என, தனியார் பள்ளி நிர்வாகங்களுக்கு  அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )