தமிழக காவல்துறை தலைமை இயக்குநரின் சரக ஆய்வுக் கூட்டம் : டிஜிபி சைலேந்திர பாபு பங்கேற்பு!

தமிழக காவல்துறை தலைமை இயக்குநரின் சரக ஆய்வுக் கூட்டம், வேலூரில் கடந்த 29ம் தேதி நண்பகல் 2:00 மணிக்கு வேலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் நடந்தது. வேலூர் சரக ஆய்வு கூட்டத்திற்கு வருகை புரிந்த தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் / படைத்தலைவர் முனைவர் . C.சைலேந்திரபாபுவை,
வேலூர் சரக காவல்துறை துணைத்தலைவர் முனைவர். ஜ.ஆனி விஜயாவும், வேலூர் சரக நான்கு மாவட்டங்களை சேர்ந்த காவல் கண்காணிப்பாளர்களும்
வரவேற்றனர்.
முன்னதாக வேலூர் மாவட்ட காவல்துறை சார்பாக காவலர்கள் அளித்த அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டு மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்ற காவல் ஆளிநர்களுக்கு சமூக விரோதிகள் மற்றும் போதை ஆசாமிகளிடமிருந்து தங்களை தற்காத்துக் கொள்ளும் பயிற்சியினை சிறப்பு பயிற்சி பெற்ற காவல் ஆளிநர்கள் செய்து காட்டியதை பார்வையிட்டார். இதை தொடர்ந்து நக்சலைட் சிறப்பு பிரிவினர்களின் பல்வேறு செயல்பாடுகள் குறித்து விளக்கும் புகைப்பட கண்காட்சி மற்றும் வேலூர் சரக காவல் துறையினரின் சிறப்பான செயல்பாடுகளை விளக்கும் புகைப்பட கண்காட்சியையும் பார்வையிட்டார்.
காவல் ஆளிநர்கள் தங்கள் உடல் நலத்தை சீராகப் பேணிக் காத்திட வேலூர் சரகத்தில் உள்ள வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலை ஆகிய 4 மாவட்டத்திற்கு உடற் பயிற்சி உபகரணங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு வழங்கினார். பின்பு வேலூர் சரகத்தில் உள்ள 4 மாவட்டத்தில் பல்வேறு வழக்குகளில் காணாமல் போன 120 கைபேசிகளை கண்டுபிடித்து அதன் உரிமையாளர்களிடம்
வழங்கினார்.
பிறகு மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்திற்கு வேலூர் சரக காவல்துறை துணைத் தலைவர், நான்கு மாவட்டங்களை சேர்ந்த காவல் கண்காணிப்பாளர்கள், கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல் உதவி/துணை கண்காணிப்பாளர்களும் கலந்து கொண்டனர்.
இந்த ஆய்வு கூட்டத்தில்: வேலூர் சரகத்திலுள்ள நான்கு மாவட்டத்தில் குற்றங்களை தடுப்பதற்காக வரும் நடவடிக்கைகள் மற்றும் அதனை மேம்படுத்துவது குறித்தும், சரகத்திலுள்ள மாவட்டங்களில் நிலுவையிலுள்ள பழைய குற்றங்களை கண்டுபிடிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகளும், அதற்குண்டான
ஆலோசனைகள் குறித்தும், சட்டம் ஒழுங்கினை பேணிக் காத்திடவும், ரவுடிகள் மற்றும் சமூக விரோதிகளின் மீது எடுக்கப்பட்டு வரும் கடும் நடவடிக்கைகளைத் தொடர்ந்து தீவிரப்படுத்துதல் குறித்தும், சாலை விபத்தினை தடுத்திடவும், பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ளவும் அதற்குண்டான சாலை பாதுகாப்பு விதிகளை மேம்படுத்துவது குறித்தும், பெருகி வரும் இணையதள குற்றங்களில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள், சைபர் பிரிவு காவலர்களுக்கு நிபுணர் தத்துவத்தை மேம்படுத்தி கொடுக்கப்படும் சிறப்பு அம்சங்கள் குறித்தும், பொதுமக்கள் கொடுக்கும் புகார் மனுக்களின் மீது உரிய விசாரணை மேற்கொண்டு அவர்களின் குறைகளை விரைந்து களைய எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்தும் mகேட்டறிந்தார்.
இறுதியாக வேலூர் சரகத்தில் போதைப்பொருள் கடத்தல், சட்டம் ஒழுங்கினை nபேணிக்காத்தல் மற்றும் சவாலான வழக்குகளில் குற்றப் புலனாய்வு மேற்கொண்டு குற்றவாளிகளை கண்டுபிடித்தல் போன்ற பணிகளை அர்ப்பணிப்புடன் சிறப்பாகப் பணியாற்றிய காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்களை ஊக்குவிக்க பண வெகுமதி மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார். இவ்வாறு வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக பத்திரிகை செய்திக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளது.
