BREAKING NEWS

தமிழகத்தில் 876 ஊராட்சிகளில் கிராம செயலகம் இந்தாண்டு கட்டப்படும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் தகவல்.

தமிழகத்தில் 876 ஊராட்சிகளில் கிராம செயலகம் இந்தாண்டு கட்டப்படும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் தகவல்.

தஞ்சாவூர் தமிழகத்தில் 876 ஊராட்சிகளில் கிராம செயலகம் இந்தாண்டு கட்டப்படும் என வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்தார். தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களைச் சேர்ந்த வருவாய்த்துறை அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு வந்தவர்களை தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வரவேற்றார்.

கூட்டத்துக்கு வருவாய்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தலைமை வகித்தார்.
கூட்டத்தில் அரசு கொறடா கோவி.செழியன் எம்பிக்கள் எஸ்.எஸ்.பழநிமாணிக்கம், செ.ராமலிங்கம், சு.கல்யாணசுந்தரம், எம்எல்ஏக்கள் துரை.சந்திரசேகரன், டிகேஜி.நீலமேகம், சாக்கோட்டை க.அன்பழகன், க.அண்ணாதுரை, பூண்டி கே.கலைவாணன், ஜவாஹிருல்லா, ராஜ்குமார் மற்றும் அரசு முதன்மை செயலாளர் குமார்ஜெயந்த் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


கூட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களிடம் கேகேஎஸ்எஸ்ஆர்.ராமச்சந்திரன் கூறியதாவது: வருவாய் துறை செயல்பாடுகளை வேகப்படுத்தி, எளிமைப்படுத்த வேண்டும். தாலுகா, விஏஓ, ஆர்டிஓ அலுவலங்களில் பொதுமக்கள் சொல்லுகிற கோரிக்கைகளை குறிப்பிட்ட தினங்களுக்காக அலுவலர்கள் முடித்துக்கொடுக்க வேண்டும் என்கிற முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களுக்கும், வேறு மாவட்டங்களுக்கும் நிறைய வேறுபாடுகள் வருவாய் துறையில் உள்ளது. டெல்டாவில் நில பிரச்சனை, குத்தகை பிரச்சனை, கோயில், மடத்து நிலங்கள் தொடர்பாக பிரச்சனைகள் அதிகம் உள்ளன.

கோயில் நிலங்களில் குடியிருப்போர்களுக்கு வீட்டு மனை பட்டா கேட்பது அதிகமாக உள்ளதாக தெரிவித்துள்ளனர். அதை சட்டப்படி எப்படி கையாளுவது என்பது குறித்து ஆலோசித்து வருகிறோம். இந்தாண்டுக்கான பயிர் காப்பீடு செலுத்தவதற்கான காலக்கெடு இம்மாதம் 30-ம் தேதியோடு முடிவடைய இருக்கிறது. எனவே, விவசாயிகளுக்கு இன்னும் நான்கு தினங்களில் அவர்கள் கேட்கும் அடங்கல் உள்ளிட்ட சான்றிதழ்களை உடனடியாக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

முதியோர் ஒய்வூதியம் உள்ளிட்ட நல திட்டங்களை பெற தகுதியுடையோர்கள் யாராக இருந்தாலும் அதற்கான சான்றிதழ்களை வருவாய் துறையினர் வழங்க வேண்டும்.
கிராமங்களில் விஏஓ அலுவலகங்கள் வேண்டும் என பலதரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அதற்காக ஊராட்சி மற்றும் வருவாய் துறை இணைந்து, தமிழகத்தில் முதற்கட்டமாக இந்தாண்டு கிராம செயலகம் என்ற பெயரில், 876 இடங்களில் ஊராட்சி அலுவலகங்கள், கூட்ட அரங்கம், விஏஓ அலுவலகங்களை என மூன்றும் சேர்த்து ஒரு கட்டிடத்தை கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் கிராமங்களை தேர்வு செய்து கட்டிடம் கட்டப்படும்.

சாதி,வருவாய், இருப்பிட சான்றிதழை போன்றவற்றை வழங்க ஒரு கால நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆன்லைனில் சான்றிதழ் கேட்டு பொதுமக்கள் விண்ணப்பம் செய்யும் நிலையில், அதை அலுவலர்கள் சரிபார்த்து குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள்ள வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. பள்ளி,கல்லுாரிகள் தற்போது திறக்கப்பட்ட நிலையில்கள், மாணவர்களுக்கு தேவையான சாதி, வருவாய், இருப்பிட சான்றிதழ்களை இரண்டு தினங்களில் வழங்க வேண்டும்.

கடந்த பத்தாண்டுகளில் விஏஓ காலி பணியிடங்கள் நிரப்ப படவில்லை. தற்போது அதை டிஎன்பிஎஸ்சி தேர்வு மூலம் இன்னும் இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு பணிகள் நிரப்பப்பட்டு விடும். சர்வேயர்கள் 800 பேர் நியமிக்கப்பட உள்ளனர். தற்போது விஏஓக்களுக்கும் சர்வே செய்ய பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
வருவாய்த்துறையிடம் ஒவ்வொரு மாவட்டத்தில் எத்தனை விண்ணப்பங்கள் கோரிக்கை மனுக்களாக வந்துள்ளது, எப்போது கொடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து கண்காணித்து அதன் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

 

வருவாய் துறை சிறப்பாக நடந்ததால் தான் அரசுக்கு நல்ல பெயர் கிடைக்கும் என்பதில் உறுதியாக உள்ளோம்.
கிராமங்களில் ஆங்கிலேயர் ஆட்சி காலங்களில் நிலங்களில் நிலசர்வே கல் அமைக்கப்பட்டது. இதை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பது குறித்து பரிசீலனை செய்யப்படும்.
தமிழகம் முழுவதும் இ–சேவை மையங்களில் சர்வர் பிரச்சினை உள்ளது. இதற்கு தீர்வு காணும் வகையில் சர்வரில் சேமிப்பை அதிகப்படுத்தவும், சாப்ட்வேர்களை அப்டேட் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. இ–சேவை மையங்களை அதிகப்படுத்த உள்ளோம். அத்துடன், ஒவ்வொரு எம்எல்ஏ அலுலங்களிலும் இ–சேவை மையங்கள் இன்னும் ஒரிரு மாதங்களில் திறக்கப்பட உள்ளது. நத்தம் புறம்போக்கு நிலங்களில் பல ஆண்டாக வசிப்போர்கள் குறித்து கணக்கு எடுக்கப்பட்டு அதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )