BREAKING NEWS

தமிழ்நாடு முழுவதும் பழைய ஓய்வூதிய திட்டம், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்

தமிழ்நாடு முழுவதும் பழைய ஓய்வூதிய திட்டம், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்

தமிழ்நாடு வருவாய் அலுவலர்கள் சங்கத்தினர் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 2 வது நாளாக திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகம் நுழைவாயில் முன்பாக சமைத்து உண்டும் இரவில் தீ மூட்டி கொட்டும் பணியும் பொருட்படுத்தாமல் போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழ்நாடு வருவாய் அலுவலர் சங்கத்தினர்
தமிழ்நாடு முழுவதும் பழைய ஓய்வூதிய திட்டம், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்

உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் 315 தாலுகா அலுவலகங்களில் பணியாற்றக்கூடிய தாசில்தார்கள், துணை தாசில்தார்கள், வருவாய் அலுவலர்கள் என 14,000 பேர் பல்வேறு கட்டமாக வேலை நிறுத்தத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று முதல் அவர்கள் அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வளாகத்தில் பணி புறக்கணிப்பு செய்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் சேர்ந்த 100 மேற்பட்ட வருவாய் அலுவலர்கள் இரண்டாவது நாளாக பணி புறக்கணிப்பு செய்து அங்கேயே சமைத்து உண்டும் தீ மூட்டி காத்திருப்பு போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர்.

அரசு தங்கள் கோரிக்கை நிறைவேற்றும் வரையில் பணி புறக்கணிப்பு செய்து போராட்டம் தொடரவும் என்று மாவட்ட நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

பேட்டி,

வெண்ணிலா
தமிழ்நாடு வருவாய் அலுவலர்கள் சங்கத்தின் மாவட்ட தலைவர்

CATEGORIES
TAGS