BREAKING NEWS

தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் 1,000 பனை விதை மற்றும் உயிர் மரக்கன்றுகள் நடவு தொடக்க விழா.

தமிழ்ப் பல்கலைக்கழகத்தில்  1,000 பனை விதை மற்றும் உயிர் மரக்கன்றுகள் நடவு தொடக்க விழா.

 

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக நிர்வாகம், காவிரித்தாய் இயற்கை வழி வேளாண் உழவர் நடுவம் சார்பில் 1,000 பனை விதை மற்றும் உயிர் மரக்கன்றுகள் நடவு தொடக்க விழா, இயற்கை பாதுகாவலர்களுக்கு விருது வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

 

இந்த விழாவை தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் வி. திருவள்ளுவன் தொடங்கி வைத்து மரக்கன்றுகளை நட்டு வைத்தார். இதில், மா, பலா, நெல்லி, இலுப்பை, கொய்யா, அரசு உள்பட 100 மரக்கன்றுகள் நடப்பட்டன. இதேபோல, 1,000 பனை விதைகளை விதைக்கும் பணியும் தொடங்கப்பட்டது.

 

 

இதையடுத்து, கண்டிராத்தம் விவசாயி மு. நரசிம்மன், அரியலூர் அரசுக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட ஆலோசகர் ஆ. வேலுசாமி, கள்ளப்பெரம்பூர் மர நடுவு குழு பெ. ரவிச்சந்திரன், ஆழியவாய்க்கால் கா. ரவிச்சந்திரன், ஆச்சாம்பட்டி கி. பாலசுப்பிரமணியன் ஆகியோருக்கு இயற்கை பாதுகாவலர் விருது வழங்கப்பட்டது.

 

காவிரித்தாய் இயற்கை வழி வேளாண் உழவர் நடுவ அறங்காவலர் அரு.சீர். தங்கராசு திட்ட அறிமுகவுரையாற்றினார்.

 

 

கவின்மிகு தஞ்சை இயக்கத் தலைவர் ராதிகா மைக்கேல், பாரத் கல்விக் குழுமச் செயலர் புனிதா கணேசன், போக்குவரத்துக் காவல் ஆய்வாளர் எம்.ஜி. ரவிச்சந்திரன், சித்த மருத்துவ ஆய்வாளர் ம. கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் வாழ்த்துரையாற்றினர்.

 

முன்னதாக, பல்கலைக்கழகப் பதிவாளர் (பொறுப்பு) சி. தியாகராஜன் வரவேற்றார். நிறைவாக, தங்க. சண்முகசுந்தரம் நன்றி கூறினார்.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )