தரங்கம்பாடி தூய தெரசா மகளிர் கல்லூரியில் தொழில் முனைவோருக்கான விருது வழங்கும் விழா .

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தூய தெரசா மகளிர் கல்லூரியில், தொழில் முனைவோருக்கான விருது வழங்கும் விழா நடைபெற்றது. தூய தெரசா மகளிர் கல்லூரியில் வணிக மேலாண்மை வியல் துறையின் சார்பாக லீட்ஸ் அசோசியேஷன் என்ற அமைப்பு தொடங்கப்பட்டது.
இந்நிகழ்விற்கு கல்லூரியின் முதல்வர் வீரா. காமராசன் தலைமை தாங்கினார்.கல்லூரி செயலர் அருட்சகோதரி கருணா ஜோசப் பாத் வாழ்த்துரை வழங்கினார். வேதாரண்யம் பாரதிதாசன் பல்கலைக்கழக மாதிரி கல்லூரியின் துணை முதல்வர் பிரபாகரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்வின் சிறப்பு அம்சமாக தரங்கம்பாடி மற்றும் பொறையார் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சிறந்த தொழில் முனைவோர்களைத் தேர்வு செய்து விருதுகள் வழங்கப்பட்டது .இதில் சந்திரப்பாடி,ஆண்டனி கடல் உணவு நிறுவனம் ,தரங்கம்பாடி சியாமளா தேவி நிறுவனம், பொறையார் கிருஷ்ணா நிறுவனம், பொறையார் மகள் ஜவுளி நிறுவனம் ஆகிய நிறுவனங்களுக்கு சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியின் முடிவில் வணிக மேலாண்மையியல் துறையின் தலைவர் திரு. ஜார்ஜ் அவர்கள் நன்றியுரை வழங்கினார் .
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வணிக மேலாண்மைவியல் துறை பேராசிரியர்கள் மற்றும் மாணவிகள் செய்திருந்தனர்.