BREAKING NEWS

தரமான விதைகளை விவசாயிகளுக்கு கொண்டு சேர்க்க தஞ்சாவூர் மாவட்டத்தில் விதைச் சான்று மற்றும் அங்ககச் சான்று இயக்குனர் ஆய்வு.

தரமான விதைகளை விவசாயிகளுக்கு கொண்டு சேர்க்க தஞ்சாவூர் மாவட்டத்தில் விதைச் சான்று மற்றும் அங்ககச் சான்று இயக்குனர்  ஆய்வு.

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள விதைச்சான்று துறை திட்டப்பணிகளை ஆய்வு மேற்கொண்டார்.
ஒருங்கிணைந்த விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்று அலுவலக வளாகத்தில் உள்ள விதைப் பரிசோதனை நிலையத்தை ஆய்வு செய்து பெறப்பட்ட விதை மாதிரிகளை உடனுக்குடன் ஆய்வு செய்து இலக்கினை விரைவில் முடிக்க அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார் .

மேலும் விதைச்சான்று துறை அனைத்து அலுவலர்கள் விதைச்சான்று அலுவலர்கள் ,விதை ஆய்வாளர்கள் ,விதை பரிசோதனை அலுவலர்கள் ஆகியோருக்கு ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

ஆய்வுக் கூட்டத்தில் அனைத்து விதைச்சான்று அலுவலர்களும் தங்களுக்கு அளிக்கப்பட்ட இலக்கினை எந்த வித தொய்வும் ஏற்படாமல் சாதனை அடைய கேட்டுக்கொண்டார். மேலும் வயல் ஆய்வு பணி மற்றும் சுத்திப்பணிகளில் விதைகளின் தரம் குறையாதவாறு ஒவ்வொரு அலுவலரும் செயல்படவும், இயற்கை வழி வேளாண்மை செய்யும் விவசாயிகளை கண்டறிந்து அங்கக வேளாண்மையை சிறப்பாக செயல்படுத்தவும் கேட்டுக்கொண்டார்.

தரமான விதைகளை விவசாயிகளுக்கு கொண்டு சேர்க்க விதைச்சான்று துறை அலுவலர்கள் பணியாற்ற வேண்டும் என்றும் விதை ஆய்வாளர்கள் அனைவரும் தனியார் மற்றும் அரசு விதை விற்பனை நிலையங்களை அவ்வப்போது ஆய்வு மேற்கொண்டு விவசாயிகளுக்கு தரமான விதைகள் எளிதாக கிடைக்க செயல்படுமாறு அறிவுரை வழங்கினார்.

தரமான விதைகளை உறுதி செய்வதே விதை பரிசோதனை நிலையத்தின் முக்கிய நோக்கமாக செயல்பட விதைப்பரிசோதனை நிலைய அலுவலர்களை கேட்டுக்கொண்டார். இந்த ஆய்வுக்கூட்டத்தில் விதைச்சான்று துணை இயக்குநர், விதைச்சான்று உதவி இயக்குனர் மற்றும் விதை பரிசோதனை அலுவலர் ஆகியோர் உடன் இருந்தனர், இறுதியாக புதிதாக கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்று அலுவலக வளாகத்தில் விதைச்சான்று துறை இயக்குனரால்
மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )