தருமையாதினத்தில் 27 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்கள்.

மயிலாடுதுறை மாவட்டம் தருமபுரம் தருமையாதீனத்திற்கு சொந்தமான இடத்தில் விருந்தினர் மாளிகை திறந்து வைத்தும், சிவனருள் இயக்கத்தின் சார்பில் 27 ஆயிரம் மரக்கன்றுகளை நடும் திட்டத்தை தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு வைத்தார்.
தொடர்ந்து திருக்கயிலாயப் பரம்பரைத் தருமையாதீனம் வேத சிவகாமப் பாடசாலையில் படிக்கும் மாணவர்களிடம் கலந்துரையாடினார். மேலும் தருமபுரம் ஸ்ரீ குருஞானசம்பந்தர் தொடக்கப் பள்ளியையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக திருக்கடையூர் ஸ்ரீ அபிராமியம்மை உடனாகிய அமிர்தகடேஸ்வரர் சுவாமி திருக்கோயிலில் ஆய்வு மேற்கொண்டர்.
ஆய்விற்குப்பின் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அவர்கள் பேசியதாவது:

ஆகமவிதிப்படி ஆண்டுகள் முடிந்த திருக்கோயில்கள் திருப்பணி செய்யப்பட்டு 12 கும்பாபிகேம் செய்யப்பட்டு வருகிறது. தமிழக முதல்வர் வழிகாட்டுதல் பணி திருப்பணி தொடங்கப்பட்டு தொய்வடைந்துள்ள திருப்பணிகளை விரைந்து முடிக்கவும். பல ஆண்டுகளாக கும்பாபிஷேகம் செய்யப்படாமல் இருக்கும் கோயில்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. கடந்த மார்ச் 27-ஆம் தேதி திருக்கடையூர் கோயில் கும்பாபிகேம் நடந்தது. அதற்கு ஆதீனத்தின் சார்பில் அழைப்புவிடுக்கப்பட்டது. அன்று வரமுடியாததால் தற்போது அமிர்தகடேஸ்வரர் கோயிலில் சுவாமிதரிசனம் செய்தேன். ஆதீனவளாகத்திற்கு வந்து அருங்காட்சியகத்தை பார்வையிட்டேன். தொடர்ந்து பாடசாலை, பசுமமடம், தொடக்கப்பள்ளி ஆகியவற்றை பார்வையிட்டேன். பாடசாலையில் பயிலும் மாணவர்களுக்கு தரமான உணவு வழங்குவதோடு தமிழ், ஆங்கில கல்வி கற்றுகொடுக்கப்படுகிறது. கல்லூரி, பள்ளிகளை பார்வையிட விருப்பமிருந்தாலும் தற்போது ஒரு பள்ளியை பார்வையிட்டுள்ளேன். பக்திபசியையும், வயிற்றுபசியையும் குருமகா சன்னிதானம் தீர்துவைத்துள்ளார். 75-வது பவளவிழா காணும் கல்லூரி விழாவில் சுவாமி விருப்பதிதை முதல்வர்கவனத்திற்கு கொண்டு சென்று பவளவிழா சிறப்பாக நடத்த தமிழக அரசும். அறநிலையத்துறையும் ஒத்துழைப்பு அளிக்கும். ஒராண்டு காலத்தில் 100க்கும்மேற்பட்ட கோயில்கள் கும்பாபிசேகம் 1500 கோயில் கும்பாபிசேகம் செய்யப்படும் என்று சட்டசபையில் அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவித்த அனைத்து பணிகளும் இந்த ஆண்டுதொடங்கப்பட்டு விரைவில் கும்பாபிஷேகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த தொன்மையான கோயில்களுக்கு 100 கோடி நிதிஒதுக்கீடு அரசு பணம் வழங்கியுள்ளார். 80 கோயில்கள் திருப்பணிகள் மேற்கொள்வதற்கான பல்வேறு விரைவான நடவடிக்கைகளை அறநிலையத்துறை எடுத்து வருகிறது. இந்த ஆண்டிற்குள் 80 கோயில் திருப்பணிகள் தொடங்கப்படும். பக்தர்கள், திருக்கோயில்கள் தூய்மையாகவும், திருப்பணிகள் செய்து கும்பாபிசேகம் செய்வதற்கும், பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள் செய்துகொடுடும். ஆதீனங்களோ சுமூகமான நல்லிணக்கத்தோடு தமிழ், சைவம் சார்ந்த ஆதீனங்களுக்கு உண்டான அனைத்துவிதமான சிறப்புகளையும் சேர்க்கும் அரசாக தமிழக அரசு இருக்கும். திருக்கோயில் இடங்களில் இருப்படமாக இருப்பவர்களை ஒரு கண்ணோட்டத்திலும், வணிகநோக்கில் இடத்தை பயன்படுத்துபவர்களை வேறொரு கண்ணோட்டத்தில் பார்க்கப்பட்டு வருகிறது, முறையான வாடகை செலுத்த முன்வந்தால் ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கையை அறநிலையத்துறையை மேற்கொள்ளாது.

கும்பாபிஷேகத்திற்கு அனுமதிவாங்கி ஏற்கனவே 5 கமிட்டி இருந்தது, தற்போது 2 குழு அனுமதி இருந்தால் போதுமென்று தமிழக அரசு அறிவித்துள்ளது. ஒரு வாரத்திற்கு குறைந்தபட்சம் ஒவ்வொரு செவ்வாய்கிழமை அனுமதிவழங்கும் கூட்டம் நடந்து. வருகிறது ஒரு மாதத்திற்கு குறைந்தபட்சம் 300 கோயில்களுக்கு கும்பாபிஷேகத்திற்கு அனுமதிவழங்கும் அரசாக தமிழக அரசு செயல்பட்டுகொண்டிருக்கிறது, ஆதீனத்திற்கு உட்பட்ட 27 கோயில்களில் திமுக ஆட்சியில் 18 கோயில்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு திருப்பணிகள் செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தில் 5 மலைகோயில்கள் வெள்ளையங்கிரிநாதர், சதுரகிரி, பேரூர் நரசிம்மன்கோயில், பருவதமலை, கண்ணகிகோயில் ஆய்வு செய்வதற்கு ஒரு கோடி நிதிஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பழமைமாறாமல் பக்தர்கள் மலைக்கோயில்களுக்கு எளிதாக சென்று வழிபடுவதற்கான ஏற்பாடுகளை செய்வதற்கான குழு அமைக்க உள்ளோம். தொன்மைமாறாமல் வசதிகள் செய்துகொடுக்கப்படும்.

பழமை, இந்து சமய அறநிலையத்துறை பொறுத்தவரையில் சிதம்பரம் நடராஜர்கோயில் கனகசபையில் 2019ம் ஆண்டு தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டது. கொரோனா தொற்றுக்குபிறகு அனுமதிக்க மறுத்தார்கள். பொதுநலநோக்கோடு கனகராஜ் என்ற வக்கீல் உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டதால் கனகசபையில் தரிசனம் செய்ய பக்தர்களை அனுமதிக்க வேண்டுமென்று நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த உத்தரவை தமிழக அரசு அமுல்படுத்தி இருக்கிறது. தருமபுரம் ஆதீனம் நிர்வாகிக்கும் கோயில்களில் எந்த புகாரும், சர்ச்சையும் ஏற்படவில்லை. ஆனால் தில்லைநடராஜர் கோயிலை பொறுத்தவரையில் தீட்சதர்கள் உள் இருக்கிற பிரச்னை, தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் பிரச்னைகள் என்று பல புகார்கள் வந்துள்ளது. புகார்கள் குறித்து ஆய்வு செய்ய வேண்டுமேன்றுதான் அறநிலையத்துறை சார்பில் கடிதம் அனுப்பியுள்ளோம். திருக்கோயிலை அறநிலையத்துறை ஏற்றுகொளும் என்று நாங்கள் கூறவில்லை. பொதுகோயில்களில் புகார்கள் வந்தால் அதனை விசாரிக்க உரிமை அறநிலையத்துறைக்கு இருக்கு. தீட்சதர்களுக்கு, தில்லை நடராஜர் கோயிலுக்கு எதிரான நடவடிககை இல்லை. ஆய்வுசெய்யும் உரிமை அறநிலையத்துறைக்கு இருப்பதால் கடிதம் அனுப்பியுள்ளோம். அவர்களும் பதில்கடிதம் அனுப்பியுள்ளார்கள். எது நியாமமோ அதன்படிதான் நடக்கும். சிறந்த முறையில் நடைபெறும் நிர்வாகம், கோயில்களை அறநிலையத்துறை கையில் எடுக்க முயற்சிக்கக கூடாது என்று முதல்வர் தெரிவித்துள்ளார். சட்டத்திற்கு புறம்பான செயல்கள், புகார்கள் இருந்தால் தான் அந்த கோயில்கள் குறித்து விசாரணை நடத்துவோம். இறையன்பர்களின் மகிழ்ச்சிதான் அறநிலையத்துறையினர் மகிழ்ச்சி என்று செயல்பட்டுகொண்டு இருக்கிறோம். எல்லா திருக்கோயில்களிலும் கணக்குகள் பார்க்கப்படுகிறது. அறநிலையத்துறை துணை, இணை ஆணையர்கள் கணக்கு பார்ப்பது நடந்துகொண்டுதான் இருக்கிறது.

தருமபுரம் ஆதீனம் செய்தியாளர்களிடம் பேசியதாவது,
தருமை ஆதீனம் 27வது குருமகா சன்னிதானம் ஸ்ரீல ஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் கூறுகையில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு திருக்கடையர் அமிர்தகடேஸ்வரர் கோயிலில் வழிபாடு நடத்தினார் தொடர்ந்து ஆதீன வளாகத்தில் 27 ஆயிரம் மரக்கன்று நடும் திட்டத்தை அமைச்சர் தொடங்கிவைத்துள்ளார். கல்லூரியில் பவளவிழா நிறைவுவிழா ஆகஸ்டுமாதத்தில் வருகிறது. கல்லூரியில் 25-ஆம் ஆண்டு விழா, 50-ஆம் ஆண்டு விழாவில் கழக ஆட்சி இருந்தது. தற்போது பவளவிழாவில் தமிழக முதல்வர் அழைக்க இருக்கிறோம் அதற்கான ஏற்பாடுகளை மாவட்ட செயலாளர் செய்துகொடுப்பதாக கூறியிருக்கிறார்கள். எப்போது ஆதீனங்கள் மரபுவழிபின்பற்றி இருக்கிற ஆதீனங்களோ இந்த அரசு இனக்கமாக செயல்படுகிறது என்பதற்கு இது எடுத்துக்காட்டாக இருக்கிறது.
இந்நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் இரா.கண்ணன், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும், நாகை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான நிவேதா எம்.முருகன், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம்.பன்னீர்செல்வம், மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ராஜகுமார், மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் உமாமகேஸ்வரி சங்கர், மயிலாடுதுறை நகர்மன்ற தலைவர் செல்வராஜ், மயிலாடுதுறை ஒன்றியக்குழுத் தலைவர் காமாட்சிமூர்ததி, செம்பனார்கோயில் ஒன்றியக்குழுத் தலைவர் நந்தினிஸ்ரீதர், மற்றும் திமுக மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் கழக பொறுப்பாளர்கள் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
