BREAKING NEWS

தாய் தந்தையை இழந்து பாட்டி அரவணைப்பில் வாழும் ஏழை குழந்தைகளுக்கு தேவையான நோட்டு புத்தகங்கள் மற்றும் புத்தாடைகளை தனது சொந்த செலவில் வழங்கிய தேனி மாவட்ட ஆட்சித் தலைவர்..

தாய் தந்தையை இழந்து பாட்டி அரவணைப்பில் வாழும் ஏழை குழந்தைகளுக்கு தேவையான நோட்டு புத்தகங்கள் மற்றும் புத்தாடைகளை தனது சொந்த செலவில் வழங்கிய தேனி மாவட்ட ஆட்சித் தலைவர்..

தேனி மாவட்டம், தேவதானப்பட்டி அருகே உள்ள பெருமாள்கோவில்பட்டி கிராமத்தில், இன்று நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் க.வீ.முரளீதரன், பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்தார்.

 

நிகழ்ச்சி முடிந்தவுடன் மாவட்ட ஆட்சித்தலைவர் வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது சின்னம்மாள் என்ற மூதாட்டியை மனுவுடன் பார்த்த மாவட்ட ஆட்சித்தலைவர் உடனடியாக வாகனத்திலிருந்து இறங்கி வந்து அவரது மனுவினை வாங்கி படித்தார். 

 

அம்மனுவில் சின்னம்மாள் தனது மகன் மற்றும் மருமகள் இறந்து விட்ட நிலையில், தற்போது யுவஸ்ரீ மற்றும் சுதாகர் ஆகிய பேரக்குழந்தைகளை தான் கூலி வேலை செய்து பராமரித்து வருகிறேன். எனவே, அவர்களுக்கு தாய், தந்தை இழந்தவர்களுக்கான அரசின் நிதியுதவி மற்றும் கல்வி உதவித்தொகை வழங்கிட வேண்டி மனு அளித்தார்.

 

 

மனுவினை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர் உரிய விசாரணை மேற்கொண்டு, அக்குழந்தைகளுக்கு அரசின் நிதியுதவி மற்றும் கல்வி உதவித்தொகை வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ள துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். 

 

 

அதனைத்தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் தனது சொந்த பணத்தினை அலுவலர்களிடம் வழங்கி அக்குழந்தைகளுக்கு தேவையான நோட்டு, புத்தகங்கள், மற்றும் ஆடைகளை வழங்கிட அறிவுறுத்தினார்.

 

 

அதனடிப்படையில், அக்குழந்தைகளுக்கு பிடித்தமான புது ஆடைகளை துணிக்கடைக்கு நேரடியாக அழைத்துச் சென்று அலுவலர்கள் வாங்கி கொடுத்தும், நோட்டு, புத்தகங்களை துறை அலுவலர்கள் நேரடியாக அவர்களது இல்லத்திற்கு சென்றும் வழங்கினார்கள்.

 

வருகின்ற தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புது துணி மணிகளை தனது பேரக்குழந்தைகளுக்கு எவ்வாறு வாங்குவது என தான் எண்ணியிருந்த நிலையில் தற்போது நோட்டு, புத்தகம் தீபாவளி பண்டிகைக்கு துணிகளை வாங்கி கொடுத்த மாவட்ட ஆட்சித் தலைவர் க.வீ.முரளீதரன் -க்கு நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன் என சின்னம்மா தெரிவித்தார்.

மாவட்ட ஆட்சியரின் இத்தகைய செயலை பொதுமக்களும் வெகுவாக பாராட்டினர்.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )