திசையன்விளை அருகே கரைச்சுத்துபுதூரில் அண்ணா மறுமலர்ச்சி திட்டம். பொதுமக்களிடம் மனுக்கள் வாங்கப்பட்டன.

திசையன்விளை வட்டம் கரைச்சுத்துப்புதுர் கிராமத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் க.புதூர் சமுதாய நல கூடத்தில் வைத்து நடந்தது. வருவாய்த்துறை, போக்குவரத்து வசதி,,சுகாதார துறை சம்பந்தமாக பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டன.
இதில் அரசு சார்பில் திசையன்விளை தாலுகா தேர்தல் பிரிவு துணை வட்டாச்சியர் நக்கீரன் பொதுமக்களிடம் மனுக்களை வாங்கினார். இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர் அல்பின் அன்றனி பிரேமா, க.புதூர் ஊராட்சி மன்ற தலைவர் முருகன், வருவாய் ஆய்வாளர் துரைசாமி, கிராம நிர்வாக அலுவலர் சத்தியவாணி, கிராம நிர்வாக அலுவலக உதவியாளர் கோபால், மாவட்ட தி.மு.க.தொண்டரணி துணை அமைப்பாளர் தனபால், க.புதூர் ஊராட்சி மன்ற துணை தலைவர் சிங் ஆகியோர் கலந்து கொண்டனர்.
படவிளக்கம்.
திசையன்விளை அருகே கரைச்சுத்துபுதூரில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் பொதுமக்களிடம் மனுக்கள் பெறப்பட்டன.