திசையன்விளையில் சுதந்திர போராட்ட மாவீரர் அழகுமுத்து கோன் குரு பூஜை விழா. மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

திசையன்விளை யில் சுதந்திர போராட்ட மாவீரர் அழகுமுத்து கோன் குரு பூஜை விழா கொண்டாடப்பட்டது.
திசையன்விளை செல்வமருதூர் யாதவ இளைஞர் அணி சார்பில் சுதந்திர போராட்ட மாவீரர் அழகுமுத்து கோன் 265 வது குரு பூஜை விழா கொண்டாடப்பட்டது. அன்னாரின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சி யில் பேரூராட்சி தி.மு.க. கவுன்சிலர் கண்ணன்,அ.தி.மு.க. கவுன்சிலர் அய்யாகுட்டி, பா.ஜ.க. நகர தலைவர் ஜெகநாதன், நகர இளைஞரணி தலைவர் அர்ச்சுனன், முருகன்,மகேஷ், அ.ம.மு.க. சார்பில் ராதாபுரம் ஒன்றிய செயலாளர் வி.பி.ஆர்.மணி,திசையன்விளை நகர செயலாளர் விஷால் முத்து ,பொருளாளர் செந்தில், முருக நயினார் மற்றும்
யாதவ இளைஞர் அணியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன், சுப்பு வடிவேல்,நல்ல கண்ணு,கண்ணன்,கொம்பு, கார்த்தி,கோபி,குமார், லிங்கம், விஷ்ணு,சுறா சுந்தர் உட்பட பலர் கலந்து கொண்டனர். பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை செல்வமருதூர் யாதவ இளைஞர் அணி யினர் செய்து இருந்தனர்.
