BREAKING NEWS

திண்டுக்கல் அருகே லாரியில் ரேஷன் அரிசி கடத்திய நபர் கைது, 14 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி, லாரி பறிமுதல்

திண்டுக்கல் அருகே லாரியில் ரேஷன் அரிசி கடத்திய நபர் கைது, 14 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி, லாரி பறிமுதல்

திண்டுக்கல் குடிமைப்பொருள் வழங்கள் குற்ற புலனாய்வுத்துறை DSP.செந்தில் இளந்திரையன் உத்தரவின் பேரில் ஆய்வாளர் சுகுணா தலைமையில் காவலர்கள் கணேசன், கணேஷ், காளிமுத்து,தினேஷ் ஆகியோர் கொடைரோடு டோல்கேட் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது அவ்வழியாக வேகமாக வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்த போது அதில் ரேஷன் அரிசி கடத்தி செல்வது தெரிய வந்தது.

இதனைத் தொடர்ந்து போலீசார் லாரி டிரைவர் மதுரை சிலைமான் பகுதியை சேர்ந்த ஈஸ்வரன் கைது செய்து 14 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி, லாரி ஆகியவற்றை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகளான ராஜபாளையத்தை சேர்ந்த கர்ணன் நாமக்கல்லை சேர்ந்த சுரேஷ் ஆகியோரை தீவிரமாக தேடி வருகின்றனர்

Share this…

CATEGORIES
TAGS