திமுக அரசின் சொத்து வரி, மின் கட்டண உயர்வை கண்டித்து மதுரை மேற்கு(தெற்கு) ஒன்றியம் சார்பில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்.

மதுரை மேற்கு (தெற்கு) ஒன்றியம் சார்பில் ஒன்றிய கவுன்சிலர் அரியூர் ராதாகிருஷ்ணன் தலைமையில் குமாரம் பிரிவில் திமுக அரசின் சொத்து வரி, மின் கட்டணம், பால் விலை உயர்வை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் முன்னாள் முப்பெரும் துறை அமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி உதயகுமார் அவர்களின் மேற்பார்வையில் மதுரை மேற்கு (தெற்கு) ஒன்றியம் சார்பில் ஒன்றிய கவுன்சிலர் அரியூர் ராதாகிருஷ்ணன் தலைமையில்,..

எம்.ஜி.ஆர் மன்ற மாவட்ட இணை செயலாளர் ராமகிருஷ்ணன் அவர்களின் முன்னிலையில் தமிழக மக்களை தொடர்ந்து வஞ்சித்து வரும் திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் சுற்றுவட்டார கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் உட்பட சுமார் 500க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றம் சொத்து வரி, மின் கட்டணம், பால் விலை உயர்வை உடனே திரும்ப பெற வலியுறுத்தியும், ஆளும் விடியா திமுக அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
