திமுக அரசை கண்டித்து புளியரை மற்றும் பிரானூர் பார்டரில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார்.
தமிழகத்தில் சொத்துவரி, பால் விலை, மின்கட்டண உயர்வை கண்டித்தும், விடியா தி.மு.க. அரசை கண்டித்தும், தென்காசி வடக்கு மாவட்ட கழக செயலாளர் கிருஷ்ணமுரளி எம்.எல்.ஏ ஆலோனையின் பேரில், செங்கோட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட புளியரையில் அதிமுக சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு செங்கோட்டை ஒன்றிய செயலாளர் செல்லப்பன் தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் தென்காசி வடக்கு மாவட்ட கழக அவைத்தலைவர் வி.பி. மூர்த்தி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், செங்கோட்டை நகர செயலாளர் கணேசன், புதூர் பேரூர் கழக செயலாளர் பாலசுப்பிரமணியன், கிளை கழக செயலாளர் செல்வராஜ், அம்மா பேரவை செயலாளர் சரவணன், மாணவரணி செயலாளர் முருகேசன், தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் அமர்நாத் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட அதிமுகவினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இதே போல தென்காசி வடக்கு மாவட்டம் , மேற்கு ஒன்றிய அதிமுக சார்பில் செங்கோட்டை அருகே உள்ள பிரானூர் பார்டரில் திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு தென்காசி மேற்கு ஒன்றியச்செயலாளர் S.R. ராமச்சந்திரன் தலைமை தாங்கினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தென்காசி வடக்கு மாவட்ட கழக இணைச் செயலாளர் சண்முகப்ரியா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். இந்த ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட வழக்கறிஞா் அணி இணைச்செயலாளா் அருண், பண்பொழி பேரூர் கழக செயலாளர் கார்த்திக் ரவி, பெரியபிள்ளை வலசை காலனி செயலாளர் வேம்பு என்ற ரவி, மாவட்ட எம்ஜீஆர் மன்ற துணைச்செயலாளா் ஜாகீர்உசேன், கழக பேச்சாளர் வாவை இனாயதுல்லா உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட அதிமுகவினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.