திமுக நல்லூர் வடக்கு ஒன்றிய இளைஞரணி சார்பில் பேராசிரியர் க. அன்பழகன் பிறந்த நாளை நூற்றாண்டு நிறைவு விழாவாக கட்சியினர் கொண்டாட்டம்.!

கடலூர் மாவட்ட செய்தியாளர் கொ.விஜய்.
கடலூர் மேற்கு மாவட்டம் நல்லூர் வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட, வேப்பூரில் திமுக முன்னாள் பொதுச் செயலாளர், பேராசிரியர் க.அன்பழகன் அவர்களின் 101 வது பிறந்த நாளை நூற்றாண்டு நிறைவு விழாவாக கொண்டாடும் பொருட்டு கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர், தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சிவெ. கணேசன் வழிகாட்டுதல்படி,

ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் தங்க. நாராயணசாமி தலைமையில் கட்சியினர் பேராசிரியரின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
அப்போது மாவட்ட கவுன்சிலர் நகர் சி. சக்தி விநாயகம், முன்னாள் ஒன்றிய பொருளாளர் ஆதியூர் கணபதிராஜா, மாவட்ட தொண்டரணி துனை அமைப்பாளர் வழக்கறிஞர் ரகுநாதன், மாளிகைமேடு ஊராட்சி மன்ற தலைவர் செந்தில்குமார்,

சேப்பாக்கம் ஒன்றிய கவுன்சிலர் கிளை செயலாளர் ஏழுமலை, திருப்பயர் கிளை செயலாளர் சிவக்குமார், ஒன்றிய மாணவரணி சேப்பாக்கம் மாரிமுத்து, ஆதியூர் கிளை இளைஞரணி அமைப்பாளர் உதயசூரியா, நகர் செல்வம், ஐவதகுடி ஊராட்சி மன்ற தலைவர் முனியன் மற்றும் நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.
