திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் நமக்கான அடையாளம் “திராவிட மாடல்” என்ற தலைப்பில் விளக்க பொதுக்கூட்டம்.

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் வட்டம் கணியூரில் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் மறைந்த மடத்துக்குளம் இரா.மோகன் அவர்களின் நினைவேந்தலை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் நமக்கான அடையாளம் “திராவிட மாடல்” என்ற தலைப்பில் விளக்க பொதுக்கூட்டம் மடத்துக்குளம் திராவிடர் கழக ஒன்றிய தலைவர் கணக்கன் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக திராவிடர் விடுதலை கழக தலைவர் கொளத்தூர் மணி மற்றும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கத்தைச் சார்ந்த பேராசிரியை. சுந்தரவள்ளி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். மேலும் இந்நிகழ்வில் மடத்துக்குளம் ஒன்றிய செயலாளர் சிவானந்தம், வழக்கறிஞர். சாதிக்பாட்சா, விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய செயலாளர் பழ.ராஜசேகரன் மற்றும் பல்வேறு நிர்வாகிகள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
