திருக்கோயிலில் மகா கும்பாபிஷே விழாவில் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து கலை நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்தார்.

கோவில்பட்டி அருகே ஸ்ரீ மகா கணபதி ஸ்ரீ மகாகாளியம்மன் திருக்கோயிலில் மகா கும்பாபிஷே விழாவில் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து கலை நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உருளைகுடியில் அமைந்துள்ள ஸ்ரீ மகா கணபதி ஸ்ரீ மகாகாளியம்மன் ஸ்ரீ வைரவர் சாமி திருக்கோயிலில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

இவ்விழாவில் முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து கலை நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.
அப்பொழுது உருளைகுடியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கிளை செயலாளர் பாண்டியராஜன் தலைமையில் 100க்கு மேற்பட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திலிருந்து விலகி முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ முன்னிலையில் அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து பள்ளி மாணவ மாணவிகள் உருளைகுடியில் அரசு பஸ் வசதி வேண்டும் என்று கோரிக்கை மனுவை கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ வழங்கினர். தங்கள் கோரிக்கையை நிறைவேற்றி தருவோம் என்று வாக்குறுதி வழங்கினார்.

நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் அன்புராஜ், எட்டையாபுரம் நகர செயலாளர் ராஜகுமார்,ஆவின் கூட்டுறவு சங்க தலைவர் தாமோதரன்,நகர்மன்ற உறுப்பினர்கள் கவியரசன், செண்பகமூர்த்தி,அம்மா பேரவை ஒன்றிய செயலாளர் சாமி ராஜ், உருளைகுடி கிளைச் செயலாளர் பாலமுருகன்,

ஒன்றிய இனைச் செயலாளர் தனலட்சுமி மணிராஜ், பிக்கிளிபட்டி கிளை செயலாளர் ஜெயராஜ், கடலையூர் கிளை செயலாளர் பாலாறு, முன்னாள் ஒன்றிய செயலாளர் போடு சாமி, அமைப்புசாரா ஓட்டுனர் அணி சிவகுருநாதன், அதிமுக நிர்வாகிகள் கோபி, முருகன், பழனி குமார், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

👍