திருச்சி சிறப்பு முகாமில் 16 இலங்கைத் தமிழர்கள் நிபந்தனையுடனும் விடுதலை – மாவட்ட ஆட்சியர் சந்திப்பு.

திருச்சி மத்திய சிறை வளாகத்திற்குள் சிறப்பு முகாம் செயல் பட்டு வருகிறது. இம்முகாமில் இந்தோனேஷியா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் இருந்து இந்தியா வந்து பல்வேறு குற்றச்செயலை ஈடுபட்டவர்கள் சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதேபோல் இலங்கையை சேர்ந்த ஈழத் தமிழர்கள் கடவுச்சீட்டு உள்பட பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டவர்கள் 108 பேர் அடைக்கப்பட்டுள்ளனர். சிலருக்கு வழக்கு முடிக்க வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது ஆனாலும் அவர்கள் விடுவிக்கப்படவில்லை என கூறப்படுகிறது இதனுடைய கடந்த மாதம் 20ஆம் தேதி தங்கள் விடுதலை செய்ய வலியுறுத்தி சுமார் இரண்டு வாரங்களுக்கு உண்ணாநிலை போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இதில் பலருக்கு உடல் சுகவீனம் ஏற்பட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த வாரம் உமாரமணன் என்ற ஒரு ஈழத் தமிழர் திடீரென தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். அவரை மீட்டி உடனடியாக திருச்சி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அனுமதிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார்.மாநகர காவல்துறை ஆணையர் கார்த்திகேயன் மற்றும் அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையர் ஜெசிந்தாலாசரஸ் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

தொடர்ந்து திருச்சி மத்திய சிறைச்சாலையில் உள்ள சிறப்பு முகாமிலிருந்து இலங்கைத் தமிழர்கள் 16 பேரை விடுவித்து தமிழ்நாட்டில் உள்ள அகதிகள் முகாம்களில் 11பேர் மற்றும் முகாமிற்கு வெளியில் 5 பேர் தமிழ்நாட்டில் உள்ள தங்களது இல்லத்திலிருந்த வாழக்கை நடத்திட வேண்டும் என்றும் , எவ்வித குற்ற நடவடிக்கைகளிலும் ஈடுபடக்கூடாது என்கிற நிபந்தனையுடனும் விடுவித்ததைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப்குமார்,
இச்சிறப்பு முகாமிலிருந்து விடுவித்ததற்குப் பின்னர் வாழ்வினைச் சிறப்பாக அமைத்துக் கொள்ள வேண்டும், எவ்வித குற்ற நடவடிக்கையிலும் ஈடுபடக்கூடாது என தெரிவித்தார். மேலும் முகாம்வாசிகள் தெரிவித்த கோரிக்கைகள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்டும் என தெரிவித்தார். இந்நிகழ்வின் போது மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தார்.
