திருச்சி திருவெறும்பூர் பகுதியில் கஞ்சா விற்ற வாலிபரை கைது செய்ததோடு அவரிடமிருந்து சுமார் 500 கிராம் கஞ்சா பறிமுதல் செய்துள்ளனர்.

திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள வள்ளுவர் நகரை சேர்ந்தவர் மணிகண்டன் இவரது மகன் தமிழரசன் (26)இவர் திருவெறும்பூர் பகுதியில் கஞ்சாவை 50 கிராம் அளவில் பாக்கெட்டுகளாக வைத்துக்கொண்டு விற்று உள்ளார்.
அப்போழுதுஅந்தப் பகுதியில் ரோந்து சென்ற திருவெறும்பூர் போலீசார் தமிழரசன் கஞ்சா பொட்டலம் விற்ற பொழுது கையும் களவுமாக திருவெறும்பூர் போலீசார் கைது செய்தனர். மேலும் தமிழரசனிடம் இருந்து 10 கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்துள்ளனர். இதன் எடை சுமார் 500 கிராம் இருக்கும் இதன் மதிப்பு ரூ 4000 ஆகும்
CATEGORIES குற்றம்
TAGS ஓசூர் அருகே கஞ்சா விற்ற வாலிபர் கைதுகுற்றம்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்திருச்சி திருவெறும்பூர்திருச்சி மாவட்டம்திருவெறும்பூர் காவல் நிலையம்