BREAKING NEWS

திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிக்கை

திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிக்கை

 

திருச்சி மாவட்டம், 

மாண்புமிகு கழகத் தலைவர் அவர்களின் ஆணைக்கிணங்க திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.கழகத்தில், கழகத்தின் சார்பு அணிகளான இளைஞர் அணி, மாணவர் அணி, தொண்டர் அணி, விவசாய அணி, மகளிர் அணி, மகளிர் தொண்டர் அணி, பொறியாளர் அணி விவசாய தொழிலாளர் அணி,

 

வழக்கறிஞர் அணி, இலக்கிய அணி, கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை, ஆதிதிராவிடர் நல அணி, தொழிலாளர் அணி, சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு, நெசவாளர் அணி, வர்த்தகர் அணி, மீனவர் அணி, மருத்துவர் அணி, தகவல் தொழில்நுட்ப அணி மற்றும் புதியதாக உருவாக்கப்பட்டுள்ள விளையாட்டு மேம்பாட்டு அணி, சுற்று சூழல் அணி, அமைப்பு சாரா தொழிலாளர் அணி, வெளிநாடு வாழ் இந்தியர் நல அணி போன்ற அணிகளுக்கு,

மாவட்ட கழகம்
தலைவர்-1
துணை தலைவர்-1
துணை அமைப்பாளர் -5
மாநகர கழகம்
தலைவர் -1
துணை தலைவர்-1
அமைப்பாளர் -1
துணை அமைப்பாளர் -5
ஒன்றிய கழகம்
அமைப்பாளர்-1
துணை அமைப்பாளர் -5
அமைப்பாளர் -1
நகர கழகம்
துணை அமைப்பாளர் -5
நகர வார்டு கழகம்
அமைப்பாளர்-1
துணை அமைப்பாளர்-3
பேரூர் கழகம்
அமைப்பாளர் 1
துணை அமைப்பாளர் -3
பேரூர் வார்டு கழகம்
அமைப்பாளர்-1
துணை அமைப்பாளர்-2
பாகம் (பூத்) அளவில்
(இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி,தகவல் தொழில் நுட்ப அணி)
அமைப்பாளர் -1
துணை அமைப்பாளர் -2

குறிப்பு :
1.வயது வரம்பின் காரணமாக இளைஞர் அணி, தகவல் தொழில் நுட்ப அணிகளுக்கு மட்டும் மாவட்ட அளவில், தலைவர், துணை தலைவர், பதவிகள் உருவாக்க படவிலலை
2.இளைஞர் அணி உச்ச வயது வரம்பு ஒன்றியம், பகுதி, நகரம், பேரூர் கழகம் – 35 வயது மாவட்ட கழகம், மாநகர கழகம் 40 வயது,.

3. மருத்துவர் அணி மாவட்டம் மற்றும் தொகுதி அளவில் மட்டும் நியமிக்க பட உள்ளது.
மேல் கண்ட படி அமைப்பாளர் துணை அமைப்பாளர்கள் நியமிக்கப்பட உள்ளதால் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள விருப்ப மனு படிவத்தை வண்ண நகல் எடுத்து அவற்றை பூர்த்தி செய்து கீழ் கண்ட மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பேரூர் கழக அலுவலகங்களில் 14/12/2022 முதல்20/12/2022 வரை (காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை) ஒப்படைக்குமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்.
அந்தந்த மாநகரம், பகுதி, ஒன்றியம், நகரம், பேரூர் கழக அணிகளுக்கு விண்ணப்பங்களை கீழ்க்காணும் முகவரிகளில் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து வழங்கிட வேண்டும்.

1.மருங்காபுரி வடக்கு ஒன்றியம் : C.செல்வராஜ் ஒன்றிய செயலாளர், சீனிவாசா திரையரங்கம், கோவில்பட்டி, மருங்காபுரி தாலுகா, திருச்சி மாவட்டம்.
2.மணப்பாறை ஒன்றியம் C.ராமசாமி ஒன்றிய செயலாளர், அகிலாண்டேஸ்வரி திருமண மண்டபம், கோவில்பட்டி ரோடு, மணப்பாறை, திருச்சி மாவட்டம்.

3.திருவெறும்பூர் வடக்கு ஒன்றியம் : K.S.M கருணாநிதி ஒன்றிய செயலாளர், தீபம் காம்ப்ளெக்ஸ், திருவெறும்பூர், திருச்சி – 13.
4.திருவெறும்பூர் தெற்கு ஒன்றியம் : C.கங்காதரன் ஒன்றிய செயலாளர், ஐ.டி.பார்க் டபுள் ரோடு, நவல்பட்டு, அண்ணா நகர் அஞ்சல், திருச்சி-16.

5.மருங்காபுரி தெற்கு ஒன்றியம் : C.சின்ன அடைக்கண் ஒன்றிய செயலாளர், ஸ்ரீராம் அக்ரோ சர்விஸ், காவல் நிலையம் எதிரில், துவரங்குறிச்சி. திருச்சி மாவட்டம்.
6.மருங்காபுரி மத்திய ஒன்றியம் : மு.பழனியாண்டி ஒன்றிய செயலாளர், தி.மு.க. அலுவலகம், கல்லாமேடு, பளுவஞ்சி போஸ்ட், கோவில்பட்டி வழி, மருங்காபுரி தாலுகா, திருச்சி 621306,

7.வையம்பட்டி வடக்கு ஒன்றியம் : R.ஸ்ரீரங்கன் ஒன்றிய செயலாளர், ஒன்றிய தி.மு.க.அலுவலகம், மட்டப்பாறை பட்டி, நால் ரோடு, எஸ்.ஆர்.பெட்ரோல் பங்க் அருகில், தவளைவீரன்பட்டி போஸ்ட், திருச்சி-621311.

8.வையம்பட்டி தெற்கு ஒன்றியம் : V.A.இராஜேந்திரன் ஒன்றிய செயலாளர், வேல்முருகன் ஜவுளி ஸ்டோர், பாலவிடுதி ரோடு, வையம்பட்டி போஸ்ட், மணப்பாறை தாலுகா, திருச்சி -11.

9.மணப்பாறை நகரம் : மு.ம.செல்வம் நகர செயலாளர், நகர தி.மு.க.அலுவலகம், நகராட்சி நாள் அங்காடி, மணப்பாறை, திருச்சி-621306.

10.துவாக்குடி நகரம் : இ.காயாம்பு நகர செயலாளர், நகர கழக அலுவலகம், அண்ணா வளைவு, துவாக்குடி, திருச்சி 22.

11.கூத்தைப்பார் பேரூர் : M.R.T.P.K. தங்கவேல், பேரூர் கழக செயலாளர், முருகன் கோவில் அருகில், பாரதி புரம், திருவெறும்பூர்,திருச்சி -13. 12.பொன்னம்பட்டி பேரூர் : K.A.நாகராஜன் பேரூர் கழக செயலாளர், அம்பிகா அபார்ட்மெண்ட், 75, ரைஸ் மில் தெரு, துவரங்குறிச்சி, திருச்சி-621314.
குறிப்பு : பகுதி கழகத்திற்கு விண்ணப்பம் வழங்கும் மற்றும் பெரும் இடம் பின்னர் அறிவிக்கப்படும்.

இவ்வாறு திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )