திருச்சி நாராயணன் கல்வி குழுமத்தின் சார்பில் 2நாள் இலவச இனையதளம் மூலம் மாதிரி நீட் மீட்டர் தேர்வு .

இந்தியா முழுவதும் இலவசமாக நீட் தேர்வுக்கான இணையதள மாதிரி தேர்வு நடைபெற உள்ளது. இதுகுறித்து நாராயண கல்வி குழுமத்தின் திருச்சி பயிற்சி மைய துணைப் பொது மேலாளர் வெங்கட் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் இந்தியா முழுவதும் நாராயணன் கல்வி குழுமத்தின் 650 க்கும் மேற்பட்ட பள்ளிக்கூடங்களையும் பயிற்சி கூடங்களையும் நடத்தி வருகிறது. இதில் 23மாநிலங்களில் சுமார் ஆறு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.
பயிற்சி மையத்தின் மூலமாக( மெட்ரிக்/ சி.பி.எஸ்.சி) எட்டாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை பயின்று வரும் மாணவர்களுக்கு JEE மற்றும் NEET பயிற்சிக்கான அடிப்படை பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றது.
தற்போது இந்திய அரசால் ஜூலை 17ஆம் தேதி அன்று நடத்தப்பட உள்ள நீட் தேர்வில் கலந்து கொண்டு தேர்வு எழுத உள்ள அனைத்து மாணவ மாணவிகளுக்கும் மன உறுதியை மேம்படுத்தும் வகையில் மாணவ மாணவிகளின் நீட் தேர்வின் பயத்தைப் போக்கும் வகையில் நாராயணா நிறுவனத்தின் மூலம் ஜூலை 7 மற்றும் 12ம் தேதிகளில் தமிழ் நாட்டிலுள்ள தனியார் மற்றும் அரசு பள்ளிகளில் பயின்று வரும் அனைத்து தரப்பு மாணவர்களும் மேற்படி இலவசமாக இனணயதள மாதிரி நீட் மீட்டர் தேர்வு நடைபெற உள்ளது. இந்த மாதிரி நீட் தேர்வில் மாணவ மாணவிகள் கலந்துகொண்டு தங்களை சிறந்த முறையில் தயார் செய்து கொள்ளலாம் என தெரிவித்தார்.