BREAKING NEWS

திருச்சி மாவட்ட எல்லை வரை உள்ள காவல் நிலையங்களை ஆய்வு செய்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்

திருச்சி மாவட்ட எல்லை வரை உள்ள காவல் நிலையங்களை ஆய்வு செய்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் – சாலை விபத்து தடுப்பு தொடர்பாக ஆலோசனை.

திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பதவியேற்ற அஜய்குமார். திருச்சி மாவட்டங்களில் உள்ள காவல் நிலையங்களில் சென்று அதிரடியாக ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இதேபோல கடந்த மாதம் திடீரென தனது சைக்கிளில் புறப்பட்டு மணப்பாறை உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.


அதன் ஒரு பகுதியாக இன்று காலை சென்னை நெடுஞ்சாலையில் திருச்சி மாவட்ட எல்லையான பெரம்பலூர் வரை திடீரென தனது சைக்கிளில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.


திருச்சி மாவட்டம் முதல் பெரம்பலூர் மாவட்டம் வரை சாலைகளில் விபத்து நடைபெறும் இடங்களையும் பார்வையிட்டு அப்பகுதியில் பணியில் ஈடுபட்ட போக்குவரத்து ஆய்வளர்கள் மற்றும் போக்குவரத்து காவலர்களிடம் விபத்து தடுப்பது குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.


இதனை தொடர்ந்து சிறுகனூர் காவல் நிலையம் சென்று பதிவேடுகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு திரும்பினார்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )