திருச்சியில் தஞ்சை பாரம்பரிய பரதநாட்டிய வழிமுறை பயிற்சி – பத்மஸ்ரீ நர்த்தகிநடராஜன் பங்கேற்பு.

தஞ்சை பாரம்பரிய பரதநாட்டிய வழிமுறை 2நாள் பயிற்சி பட்டறை திருச்சி சிங்காரதோப்பில் உள்ள ரசிகரஞ்சன சபாவில் திருச்சி பிரியாலயா ஆர்ட்ஸ் அகாடமியின் இயக்குனர் குரு ஸ்ரீ சுப்ரியா ரவிக்குமார் தலைமையில் நடைபெற்றது.
இதன் சிறப்பு விருந்தினராக இன்று பத்மஸ்ரீ, கலைமாமணி நர்த்தகிநடராஜ் பங்கேற்று பஞ்சநடையில் திருக்குறள், சங்கீர்த்தன சாபு தில்லானா, திருப்புகழ் ஆகியவற்றை பரதம் பயிலும் மாணவ – மாணவிகளுக்கு பயிற்றுவித்தார். இதில் 50-க்கும் மேற்பட்ட மாணவ – மாணவிகள் கலந்து கொண்டனர்.
CATEGORIES திருச்சி