திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி சுவாமி தரிசனம் செய்தார்..
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி சுவாமி தரிசனம் செய்தார்..
அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி வந்தார்.
அவருக்கு கோவில் சண்முகவிலாச மண்டபத்தில் வைத்து கோவில் இணை ஆணையர் கார்த்திக் தலைமையில் தாம்பூல பிரசாதம் கொடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் அவர் மூலவர், சண்முகர், தட்சணாமூர்த்தி, வள்ளி, தெய்வானை, பெருமாள், சூரசம்காரமூர்த்தி உள்ளிட்ட அனைத்து சன்னதிகளுக்கும் சென்று சாமி தரிசனம் செய்தார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
CATEGORIES தூத்துக்குடி