திருநெல்வேலி சிவந்திபுரம் ஊராட்சி இரண்டு சாலைகளை விரைவில் புதியதாக அமைப்பதற்கு நடவடிக்கை.

திருநெல்வேலி மாவட்டம் சிவந்திபுரம் ஊராட்சி பேருந்து நிலையம் முதல் தாமிரபரணி ஆறு வரையுள்ள இரண்டு கிலோமீட்டர் தூரம் உள்ள தைப்பூச துறை சாலையும், புலவன்பட்டி கிராமத்தில் ரைஸ்மில் முதல் வாட்டர் டேங்க் வரை உள்ள இரண்டு சாலைகளும் அமைத்து எட்டு ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது அந்த சாலைகள் மிகவும் பழுதடைந்து விட்டது பொது மக்கள் பயணிக்க முடியாத அளவிற்கு குண்டும் குழியுமாக உள்ளது இரு சக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு சாலை மிகவும் மோசமாக உள்ளது.
மற்றும் கர்ப்பிணி தாய்மார்கள் மருத்துவமனை செல்வதற்கு மிகவும் சிரமமாக உள்ளது என்பதை இன்று 4.6.2022 அன்று பாபநாசம் அணையில் இருந்து கார் சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விடுவதற்கு வருகை தந்த மாவட்ட ஆட்சித்தலைவர் மதிப்பிற்குரிய வே.விஷ்ணு அவர்களிடம் அம்பாசமுத்திரம் சட்டமன்ற உறுப்பினர் மதிப்பிற்குரிய இசக்கி சுப்பையா அவர்கள் இந்த இரண்டு சாலைகளையும் பொதுமக்கள் நலன் கருதி புதிதாக அமைக்க வேண்டிய அவசியம் குறித்து விரிவாக எடுத்துக் கூறினார்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் வே.விஷ்ணு அவர்கள் இரண்டு சாலைகளை விரைவில் புதியதாக அமைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினார்கள்