திருநெல்வேலி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பாக பெருந்தலைவர் ஐயா கு.காமராஜர் அவர்களின் திருவுருவ சிலைக்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செய்தார்கள்.

திருநெல்வேலி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பாக பெருந்தலைவர் ஐயா கு.காமராஜர் அவர்களின் திருவுருவ சிலைக்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செய்தார்கள். அதன்பின்பு மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்களுக்கு நினைவஞ்சலி வீரவணக்கம் செலுத்த திருநெல்வேலி மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் அலுவலகத்தில் இருந்து பேரணியாக செல்லப்பட்டது.

மாநகரத்தில் உள்ள தாமிரபரணி நதிகரையில் அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தின் முன்பு நடைபெற்ற மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்கள் ஊதிய (சம்பள) உயர்வு கேட்டு நடத்திய உரிமை போராட்டத்தில் ஈடுபட்டு காவல்துறையினரால் விரட்டி அடிக்கப்பட்டு தாமிரபரணி ஆற்றில் மூழ்கி உயிரிழந்த 17 அப்பாவி மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்களுக்கு,,,

திருநெல்வேலி மாநகர் மாவட்டம், நாங்குநேரி சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் கமிட்டியின் சார்பாக நடைபெற்ற நினைவஞ்சலி வீரவணக்கம் நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய அமைச்சர் திரு.தனுஷ்கோடி ஆதித்தன் அவர்கள், தமிழக காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் திரு.செல்வபெருந்தகைஅவர்கள், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொருளாளரும், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் திரு.நாங்குநேரி ரூபி ஆர்.மனோகரன் எம்.எல்.ஏ.,அவர்கள்,
திருநெல்வேலி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் திரு.சங்கரப்பாண்டியன்மற்றும் நாங்குநேரி சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் கமிட்டியின் தொகுதி பொறுப்பாளர், மாநில, மாவட்ட, வட்டார, நகர, பேரூராட்சி, பஞ்சாயத்து, வார்டு, தலைவர்கள், நிர்வாகிகள், INTUC தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் SC துறை தலைவர்கள், நிர்வாகிகள், திரளாக கலந்து கொண்டு நினைவஞ்சலி வீரவணக்கம் செலுத்தினார்கள்.
