BREAKING NEWS

திருநெல்வேலி மாவட்டம் பேட்டையில் எஸ்டிபிஐ கட்சியினர் ஆர்ப்பாட்டம்.

திருநெல்வேலி மாவட்டம் பேட்டையில் எஸ்டிபிஐ கட்சியினர் ஆர்ப்பாட்டம்.

எஸ்டிபிஐ கட்சி நெல்லை சட்டமன்ற தொகுதி சார்பில் இறைத்தூதர் நபிகள் நாயகம் பற்றி சர்ச்சை கருத்து வெளியிட்ட பிஜேபி செய்தி தொடர்பாளர்கள் நுபுர்சர்மா நவீன் ஜிண்டால் ஆகியோரை கைது செய்ய வலியுறுத்தியும் உத்தரப்பிரதேசத்தில் புல்டோசரை கொண்டு வீடுகளை இடிக்கும் காட்டு தர்பார் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் யோகி ஆதித்யநாத் அரசை கண்டித்தும் பாரதிய ஜனதா கட்சி பதவி விலக வேண்டும் என்றும் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்பாட்டத்திற்கு நெல்லை சட்டமன்றத் தொகுதி தலைவர் முஹம்மது அசனார் தலைமை தாங்கினார்,
நெல்லை தொகுதி மற்றும் பகுதி நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர் ,தொகுதி இணை செயலாளர் ரிபாயி வரவேற்புரைஆற்றினார்,எஸ்டிபிஐ கட்சி மாநில பொதுச் செயலாளர் அஹமது நவவி, மாநில பேச்சாளர் பேட்டை முஸ்தபா, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில செயற்குழு உறுப்பினர் ரியாஸ் அஹமத், நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்டின் மாவட்ட தலைவர் ஜன்னத்ஆலிமா, கண்டன உரையாற்றினார்கள்.

*கண்டன உரையாற்றிய மாநில பொதுச்செயலாளர் அகமது நவவி தனது உரையில் *

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் குறித்த இழிவான கருத்துக்கள் மன்னிக்க முடியாதவை!

நுபுர் ஷர்மா மற்றும்நவீன் ஜிண்டாலை
கைது செய்ய வேண்டும்
இந்தியாவின் கண்ணியத்தை குலைத்த
பாஜக அரசசு பதவி விலக வேண்டும்
தேசத்தைக் கொல்லும் சங்பரிவாரை தடுத்து நிறுத்த ஜனநாயக சக்திகள் ஒன்றுசேரவேண்டும், அறவழி போராளிகளின் வீடுகளை புல்டோசரை கோண்டு இடிக்கும் உ.பி.அரசை கண்டிக்கிறேன்
ஜனநாயக சக்திகளின் மவுனம் மிகப் பெரிய ஆபத்தை விளைவிக்கும் என்று தனது உரையில் சுட்டிக்காட்டினார்.

கூட்டத்தில் ஆண்கள் பெண்கள் உட்பட 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் ,மத்திய அரசையும் யோகி அரசையும் கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன
ஆர்பாட்டத்தில் மாவட்ட தலைவர் சாகுல் ஹமீது உஸ்மானி, பொதுச் செயலாளர் பர்கிட் அலாவுதீன், செயலாளர் ஜவுளி காதர், பொருளாளர் முகம்மது காசிம், செயற்குழு உறுப்பினர்கள் ரினோஷா,சேக் சாலி,சேக் அப்துல்லா, தொகுதி நிர்வாகிகள் ஜெய்லானி,பீர்,காஜா, பயாஸ்,தாவுத்ஷா கலந்து கொண்டனர், இறுதியாக தொகுதி செயலாளர் முகமது கவுஸ் நன்றி உரைஆற்றினார்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )