BREAKING NEWS

திருநெல்வேலி மென்பொறியாளர் கொலை: நாகர்கோவிலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆர்ப்பாட்டம்

திருநெல்வேலி மென்பொறியாளர் கொலை: நாகர்கோவிலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆர்ப்பாட்டம்

திருநெல்வேலியில் மென்பொறியாளர் கவின்குமார் சோகம் அளிக்கும் சாதி ஆணவக் கொலையின் பேரில், குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்கும் விதமாகவும், ஆணவக் கொலைகளை தடுக்கும் புதிய சட்டம் இயற்ற தமிழக அரசை வலியுறுத்தும் வகையிலும், நாகர்கோவில் வேப்பமூடு பூங்கா அருகில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டம் நாகர்கோவில் மாநகர மாவட்டச் செயலாளர் அல்காலித் தலைமையில் நடைபெற்றது.

இதில் தென் மண்டல துணைத் தலைவர் பகலவன், இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை மாவட்ட அமைப்பாளர் ஹமீது பயாஸ், கிழக்கு மண்டல பகுதி செயலாளர் செல்வராஜ், தெற்கு மண்டல பகுதி செயலாளர் சதீஷ் பாபு, மேற்கு மண்டல பகுதி செயலாளர் ஞானசேகர், வடக்கு மண்டல பகுதி செயலாளர் P.சதீஷ் பாபு, ஊக ஒருங்கிணைப்பாளர் தொல்காப்பியன், சமூக ஊடக மாவட்ட பொறுப்பாளர் யுவன் ராஜன், மகளிர் விடுதலை இயக்க மாவட்ட துணை அமைப்பாளர்கள் செல்வி, சல்பேஸ்வரி, சி. பி. ஐ. எம். எல் ரெட் ஸ்டார் மாவட்ட தலைவர் மணவை கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு உரையாற்றினர்.

ஆணவ கொலைகள் எதிராக உரிமை கோரிய இப்பொது ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான சிறுத்தைகள் உற்சாகமாக பங்கேற்றனர். மாநில அரசின் மௌனத்தையும், நீதிக்கான தேவை குறித்தும் பேசப்பட்ட இந்த நிகழ்வில், சமூக நீதிக்கு ஆதரவாக பல கோஷங்களும் எழுப்பப்பட்டன.

CATEGORIES
TAGS