திருப்பனந்தாள் அ.தி.மு.க. பொதுகூட்டத்தில் அதிமுக ஆட்சியில் கொண்டுவந்த திட்டங்களை முடக்கியதுதான் திமுக அரசின் சாதனை முன்னாள் எம்.பி. பாரதிமோகன் பேச்சு.
![திருப்பனந்தாள் அ.தி.மு.க. பொதுகூட்டத்தில் அதிமுக ஆட்சியில் கொண்டுவந்த திட்டங்களை முடக்கியதுதான் திமுக அரசின் சாதனை முன்னாள் எம்.பி. பாரதிமோகன் பேச்சு. திருப்பனந்தாள் அ.தி.மு.க. பொதுகூட்டத்தில் அதிமுக ஆட்சியில் கொண்டுவந்த திட்டங்களை முடக்கியதுதான் திமுக அரசின் சாதனை முன்னாள் எம்.பி. பாரதிமோகன் பேச்சு.](https://aramseithigal.com/wp-content/uploads/2023/03/WhatsApp-Image-2023-03-13-at-11.37.16.jpeg)
தஞ்சாவூர், திருப்பனந்தாள் ஒன்றியம், அதிமுக சார்பில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின், 75 ஆவது பிறந்தநாள் பொதுக்கூட்டம் முன்னாள் எம்.பி பாரதிமோகன், தலைமையில் திருப்பனந்தாள் கடை வீதியில் நடைபெற்றது.
கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ.ராமநாதன், ஒன்றிய செயலாலளர்கள் ஆர்.கருணாநிதி, ஏவிகே.அசோக்குமார்,சோழபுரம் அறிவழகன்,
தலைமைக் கழக பேச்சாளர் கொடுமுடி பாரீஸ் ராஜா உள்பட பலர் பேசினர்.
அப்போது முன்னாள் எம்.பி. பாரதிமோகன் பேசியதாவது:- தமிழகத்தில் ரூ.81 கோடியில் பேனா சிலை வைப்பது அவசியமா,எழுதும் பேனாக்களை மாணவர்களுக்கு வழங்கலாம், அதிமுக. யார் வேண்டுமானாலும் கடுமையாக உழைத்தால் அதிமுகவில் உயர்ந்த பதவியை அடையலாம்,
ஏழை, எளிய மக்களின் வாழ்க்கையை உயர்த்திய இயக்கம் அதிமுக. திமுக ஆட்சியில் எந்த ஒரு நல திட்டங்களும் இல்லை. அதிமுக ஆட்சியில் கொண்டுவந்த திட்டங்களை முடக்கியதுதான் திமுக அரசின்
22 மாத சாதனை என தெரிவித்தார்.
முன்னதாக 175 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை முன்னாள் எம்.பி.பாரதிமோகன் ஒன்றிய செயலாளர் கருணாநிதி ஆகியோர் வழங்கினர்.
கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ தவமணி, இலக்கிய அணி செயலாளர் சுந்தர்ராஜன்,பேரூர் கழக செயலாளர் மூர்த்தி, மற்றும் நிர்வாகிகள் திரளான பெண்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.